BROADBAND CONNECTION

இன்டர்நெட் சேவை வழங்குநரை தேர்ந்தெடுப்பதற்கான டிப்ஸ்

Friday, Dec 02, 2022 · 55 mins

468

tips for choosing an internet service provider ta blog image

உங்களுக்கான இணைய சேவை வழங்குநரைத் தேர்வுசெய்யும்போது, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் நிறைய உள்ளன. உங்களது வேலையைத் திறம்பட செய்துமுடிக்க, உங்களுக்குத் தேவைப்படும் பிராட்பேண்ட் (அகலப்பட்டை) இணைப்பை அதன் நம்பகத்தன்மையையும் வேகத்தையும் பொறுத்து நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் தகவல்தொடர்பு என்பது வேலைக்குச் செல்பவர்களுக்கும் மாணவர்களுக்கும் ஓர் அடிப்படை தேவையாகும். மேலும், வாடிக்கையாளர்களுக்கும் வழங்குநர்களுக்கும் தடையில்லாத அணுகல் கிடைக்க, அதிவேக அணுகல் இருப்பது மிகவும் அவசியமாகும்.

சிறப்பாகச் செயல்படக்கூடிய அலைவரிசைக்கான (பேண்ட்வித்) தேவைகள் தற்போது அதிகரித்து வரும் நிலையில், அவற்றைச் சமாளிக்க வணிகங்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஊழியர்கள் இப்போதெல்லாம் பலதரப்பட்ட சாதனங்களில், பல்வேறு இடங்களில் இருந்து, கிட்டத்தட்ட 24 மணிநேரம் 7 நாட்களும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. சிஸ்கோ நடத்திய ஒரு கணக்கெடுப்பில், 2022 ஆம் ஆண்டில், பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் நெட்வொர்க் செய்யப்பட்ட 3.6 சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டது. உங்களுக்குத் தற்போது இருக்கும் தேவைகள் மற்றும் நீங்கள் எதிர்காலத்தில் எதிர்பார்த்திருக்கும் உங்களது வளர்ச்சியின் அடிப்படையில் உங்கள் இணைய சேவை வழங்குநரைத் தீர்மானிக்க வேண்டும்.

மேலும், வணிகங்கள் தங்களுக்கென அமைத்திருக்கும் புதிய தரமாக HD வீடியோ அழைப்பு, வணிகப் பயன்பாட்டிற்கான பிற செயலிகள் உள்ளிட்ட உயர் அலைவரிசை செயலிகள் மாறி வருவதால், முக்கிய இணைய சேவை வழங்குநர்கள் (ISPs) புதிதாக என்னென்ன தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்குகிறார்கள் என்பதை நாம் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

சரியான தொழில்நுட்பத்தைத் தேர்வுசெய்தல்

இலக்கமுறை சந்தாதாரர் தடம் (DSL):

DSL என்பது இன்டர்நெட் இணைப்பாகும், அதில் தொலைபேசி இணைப்புகள் வழி டேட்டா (தரவு) அனுப்பப்படும். தொலைபேசி இணைப்புகள் தாமிரத்தால் செய்யப்பட்டவை; ஒரு சிறப்பான கடத்தியாகச் செயல்படும் பண்பு தாமிரத்திற்கு இருந்தாலும், கேபிள் அல்லது ஃபைபர்நெட் இன்டர்நெட் இணைப்பைப் போல DSL இணைப்பால் டேட்டாவை வேகமாக அனுப்ப முடியாது. உங்கள் வீட்டிற்கும் தொலைபேசி வழங்குநரின் அலுவலகத்திற்கும் இடையே உள்ள தூரமானது DSL குறித்து நீங்கள் எடுக்கும் முடிவைப் பாதிக்கும் ஒரு முக்கியக் காரணி ஆகும். அதாவது, பிரதான தடத்திற்கும் உங்களுக்கும் இடைவெளி அதிகம் இருந்தால் சிக்னல் பலவீனமாகி இன்டர்நெட் இணைப்பின் வேகமும் குறைந்துவிடும்.

கேபிள்:

கோ-ஆக்சியல் கேபிள்களைப் பயன்படுத்தி டேட்டாவை அனுப்பும் தொலைபேசி இணைப்புகளில் கேபிள் இன்டர்நெட் இணைப்புகள் இயங்குகின்றன. இலக்கமுறை சந்தாதாரர் தட இணைப்பைக் காட்டிலும் இவற்றுக்கு அதிக பேண்ட்வித் உண்டு. DSL இணைப்புடன் ஒப்பிடும்போது, இருமுனை இடைவெளியைச் சார்ந்து கேபிள் இணைப்பு செயல்படுவதில்லை. இருப்பினும் DSL இணைப்பு போலல்லாது, இதில் பயனர்களுக்கு ஒரு பிரத்தியேகமான தொலைபேசி இணைப்பும் கேபிள் இணைப்புகளும் வழக்கமாக வழங்கப்படுகின்றன. அதாவது, இதில் பேண்ட்வித் பயனர்களிடையே பகிரப்படும் என்பதால் இந்த இணைப்பில் டேட்டா பாதுகாப்பும் சற்றுக் குறைவாகவே இருக்கும். கேபிள் இணைப்புகளின் வேகமானது DSL இணைப்பை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக இருக்கும். இது வழக்கமாக, 10-50 Mbps வேகத்தை வழங்கும்.

ஃபைபர்நெட்:

இணைய சேவை வணிகத்தின் சமீபத்திய தொழில்நுட்பம் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் ஆகும். இந்தக் கேபிள்களின் மூலம் டேட்டாவை ஒளியின் வேகத்தில் அனுப்பலாம். கேபிள் அல்லது DSL இணைப்பு போலல்லாது, தொடர்பைக் குலைக்கும் காரணிகளைத் தடுக்கக்கூடிய ஒரு கண்ணாடி இதில் டேட்டாவை அனுப்பும். ஃபைபர் இணைப்பை இரண்டு வகைப்படுத்தலாம் - நேரடி இணைய அணுகல் (DIA) மற்றும் ஃபைபர்நெட் பிராட்பேண்ட். நேரடி இணைய அணுகலில் அதிகப் பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் கிடைப்பதால் இந்த இணைப்பு பொதுவாக வணிகங்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. ஃபைபர்நெட் பிராட்பேண்ட் தனிநபர்களால் அவர்களது வீட்டில் பயன்படுத்தப்படுகிறது. ஃபைபர்நெட் வேகம் 150 Mbps முதல் 1000 Mbps வரை இருக்கும்.

உங்களது பிராட்பேண்டை எவ்வாறு தேர்வுசெய்வது?

  1. உங்களது இன்டர்நெட் பயன்பாட்டைப் புரிந்துகொள்ளுதல்

    உங்கள் வீட்டிற்கு பிராட்பேண்ட் இணைப்பை வாங்குவதற்கு முன்பு நீங்கள் இணையத்தை எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இணைய சேவைகளை எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் அதற்கு எவ்வளவு டேட்டா செலவாகிறது என்பதையும் பட்டியலிடுங்கள். இணைய வேகம், டேட்டா மற்றும் பயன்பாடு குறித்த சுருக்கமான தகவல்களைத் தெரிந்துகொள்ள கீழே உள்ள அட்டவணை உதவும்.

  2. சிறந்த சேவை வழங்குநர்கள் மற்றும் அவர்களின் திட்டங்களைப் பட்டியலிடுதல்.

    உங்கள் பகுதியில் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய சேவை வழங்குநர் எது என்பதை அறிந்துகொள்ள, உங்கள் அண்டை வீட்டாரிடம் பேசுங்கள். உங்கள் இன்டர்நெட் பயன்பாட்டின் அடிப்படையில், உங்கள் பகுதியில் இருக்கும் 4-5 இணைய சேவை வழங்குநர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களின் திட்டங்களையும் கட்டணங்களையும் பட்டியலில் சேருங்கள். உங்கள் பகுதியில் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய சேவை வழங்குநர், சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

  3. சலுகைகளை ஒப்பிடுதல்

    உங்கள் பகுதியில் இருக்கும் 4-5 சிறந்த இணைய சேவை வழங்குநர்களின் பெயர்களைப் பட்டியலிட்ட பிறகு, அவர்கள் வழங்கும் சிறந்த சலுகைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலான ISPகள் அவற்றின் முழுநேர திட்டங்களைச் சலுகைகளுடன் வழங்குகின்றன. உதாரணத்திற்கு, ஆறு மாதங்களுக்கான திட்டங்கள் பெரும்பாலானவற்றில் ACT ஃபைபர்நெட் இலவச ரௌட்டர் அல்லது கூடுதலாக ஒரு மாதத்திற்கான இணைய சேவை வழங்கப்பட்டு, இலவசமாக நிறுவப்படும். நாளடைவில், நீங்கள் நிறைய சேமிக்க இந்தச் சலுகைகள் உதவும்.

  4. வேகச் சோதனையை மேற்கொள்ளுதல்

    உங்கள் இன்டர்நெட் திட்டத்தை வாங்கிய பிறகு, உங்கள் ISP வழங்கும் வேகத்திற்கான சோதனை முடிவுகளைப் பார்க்க இணைய வேகச் சோதனையை மேற்கொள்ளவும். ஊக்லா வேகச் சோதனையின் மூலம் உங்கள் இன்டர்நெட் வேகத்தை நீங்கள் சோதித்துப் பார்க்கலாம். வேகச் சோதனை முடிவுகளைப் பற்றி இங்கே இன்னும் தெரிந்துகொள்ளலாம்.

இணைய சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும்போது கேட்கப்பட வேண்டிய கேள்விகள்

இணைய சேவை வழங்குநரைத் தேர்வுசெய்வது என்பது ஒரு கடினமான விஷயமாகும். குறிப்பாக, என்ன கேள்விகளைக் கேட்பது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் அது இன்னும் சிரமமாகக்கூடும். நீங்கள் தேர்வு செய்யவிருக்கும் சேவை வழங்குநர் நீங்கள் விரும்பக்கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும் என்றால், கோடிட்ட இடத்தில் நீங்கள் கையொப்பமிடுவதற்கு முன்பு அதைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் நீங்கள் தெரிந்துகொள்வது சூட்சமங்களில் ஒன்று. தீர்க்கமாக முடிவெடுத்துத் தேவையான இணைய சேவையை நீங்கள் வாங்குவதற்கு, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

வயர் வழி அல்லது வயர் இல்லாத (வயர்லெஸ்/மொபைல்) பிராட்பேண்ட் சேவை எனக்குத் தேவைப்படுமா?

புதிய நெட்வொர்க்குக்கு மாறுவதால் நிறைய செலவீனங்கள் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தாலோ உங்களுக்கு உயர் ரக பாதுகாப்பும், செயல்பாடும் தேவைப்படும் என்றாலோ நீங்கள் தேர்வுசெய்ய வேண்டிய சிறந்த விருப்பம் வயர் வழி நெட்வொர்க் ஆக இருக்கக்கூடும். அலுவலக வேலைக்காக நீங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அதிகமாக நகரத் தேவையில்லை எனில் உங்களுக்கு வயர் வழி இணைப்பே போதுமானதாக இருக்கும். செலவு பற்றிய கவலை இல்லை என்றாலும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது அவசியம் என்றாலும் அதிநவீன தொழில்நுட்பம் தேவை என்று நினைத்தாலும், நீங்கள் வயர் இல்லாத நெட்வொர்க்கைப் பயன்படுத்துவது குறித்துத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் இணைய வேகத் தேவைகளைப் பொறுத்து, வயர் அல்லது மொபைல் பிராட்பேண்ட் இணைப்பைத் தேர்வுசெய்வார்கள். ஆனால் நீங்கள் வயர் வழி இணைப்பைத் தேர்வுசெய்வதாக இருந்தால், கேபிள் வேண்டுமா ஃபைபர் வேண்டுமா என்பதையும் நீங்கள் தேர்வுசெய்ய வேண்டியிருக்கும்.

வயர் வழி இணைப்பைத் தேர்வுசெய்வதாக இருந்தால், எனக்கு ஃபைபர் தேவைப்படுமா அல்லது தாமிரம் தேவைப்படுமா?

இந்தியாவில், தாமிரம் சார்ந்த பிராட்பேண்ட் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அந்த இணைப்பை வழங்கும் அதே ISP இன் ஃபிக்சட் டெலிஃபோன் லேண்ட்லைன் இணைப்பும் அடிக்கடி சேர்த்து வழங்கப்படும். இந்தத் துறையில் ADSL, VDSL, VDSL2+ போன்ற பல்வேறு முன்னேற்றங்கள் இருந்தாலும், தாமிரம் சார்ந்த பிராட்பேண்டின் பதிவேற்ற வேகம் 5 முதல் 10 Mbps வரை இருக்கும், அதே சமயம் பதிவிறக்க வேகம் 15 முதல் 70 Mbps வரை இருக்கும், வேகத்தில் சிறிய மாற்றங்கள் காணப்படும். ஒரு இடத்திற்கு ஃபைபர் பிராட்பேண்ட்டைக் கொண்டு வருவதிலும் சிக்கல் உண்டு. ஒரு எல்லைப் பகுதிக்குள் ஃபைபர் பிராட்பேண்டைக் கொண்டு வர, ஃபைபர் ஆப்டிக் இணைப்புகள் அங்கு அமைக்கப்பட வேண்டும். இந்தியாவில் ஃபைபர் பிராட்பேண்ட் இன்னும் குறைவாகவே பயன்படுத்தப்படுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். மறுபுறம், DSL இல் தொலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்படுவதால், தாமிரம் சார்ந்த இன்டர்நெட் இணைப்பு கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடும்.

வேற்றுமை விகிதம் (கண்டென்ஷன் ரேஷியோ) என்றால் என்ன?

ஒரே சமயத்தில் ஒரு இணைப்பிற்கென உள்ள நிலையான பேண்ட்வித்தைப் பகிரக்கூடிய இன்டர்நெட் பயனர்களின் அதிகபட்ச எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் முக்கிய அளவுரு வேற்றுமை விகிதம் ஆகும். இதன் காரணமாக நீங்கள் அதிவேக இணைய இணைப்பைத் தேர்வுசெய்தாலும், அதை அதிக எண்ணிக்கையிலானோர் பயன்படுத்தும் பட்சத்தில் வேற்றுமை விகிதம் அதிகமாக இருக்கும். அத்துடன் ஒரு பயனருக்கான இணைய வேகமும் எப்போதும் குறைவாகவே இருக்கும். உதாரணத்திற்கு வேற்றுமை விகிதம் 1:8 என்று இருந்தால், ஒரே சமயத்தில் 8 வீடுகள் வரை பேண்ட்வித்தைப் பகிர்ந்துகொள்ளலாம். இந்தியாவில் உள்ள பெரும்பாலான ISPகள் தற்போது 1:30 எனும் வேற்றுமை விகிதத்தில் இணைப்பை வழங்குகின்றன. இந்தியாவில் ஃபைபர் டு தி ஹோம் (FTTH) இன்டர்நெட் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதால் தற்போது பிரத்தியேகமான 1:1 பேண்ட்வித் உங்களுக்குக் கிடைத்திருக்கக்கூடும். அதனால் தாமதமோ பகிர்தலோ இல்லாமல் நீங்கள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ற வேகத்தை உங்களால் பெற முடிகிறது.

டேட்டாவிற்கான கட்டுப்பாடுகள் ஏதேனும் உள்ளனவா?

உங்கள் இன்டர்நெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக இணைய சேவை வழங்குநர் விதிக்கும் தடைகளே டேட்டா கட்டுப்பாடுகள் ஆகும். டேட்டா பயன்பாட்டிற்கான வரம்பு அனைத்து இணைய சேவை வழங்குநர்களாலும் அமைக்கப்படாது. ஆனால் அவ்வாறு செய்பவற்றில் சில டேட்டாவிற்கு இணக்கமான வரம்பையும், இணக்கமற்ற வரம்பையும் அமைத்து வழங்கலாம். இணக்கமற்ற டேட்டா வரம்பு வழங்கப்படும் திட்டத்தில், நீங்கள் குறிப்பிட்ட அளவிலான டேட்டாவைப் பயன்படுத்தியவுடன் உங்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் அல்லது இணைப்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்படும்.

வேகத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுமா?

பெரும்பாலான இணைய வழங்குநர்கள் வேகத்திற்கு உத்தரவாதம் வழங்குவதில்லை. ஆனால் நீங்கள் விசாரித்துப் பார்ப்பதில் பாதகம் ஒருபோதும் இருக்காது. வேகத்துடன் செயல்படுவதற்கான உத்தரவாதத்தை வழங்காவிட்டாலும், உங்கள் திட்டத்திற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள வேகத்தில் உங்கள் இணையம் செயல்படவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். கருவிகள் செயலிழப்பதாலோ உங்கள் இணைப்பை அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் பயன்படுத்துவதாலோ வேகம் குறையலாம்.

எனது ACT ஃபைபர்நெட் இணைப்பை எவ்வாறு இயக்குவது?

ACT ஃபைபர்நெட் இணைப்பை இயக்க, நீங்கள் கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்

  1. https://www.actcorp.in/new-broadband-connection-op தளத்திற்குச் செல்லவும் அல்லது ACT ஃபைபர்நெட் செயலியைப் பதிவிறக்கவும்

  2. நீங்கள் விரும்பும் இணைப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்: வீட்டிற்கான பிராட்பேண்ட் அல்லது அலுவலகத்திற்கான பிராட்பேண்ட்.

  3. பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், முகவரி போன்ற உங்களது தனிப்பட்ட விவரங்களைப் படிவத்தில் உள்ளிடவும்.

  4. உங்களுக்கு விருப்பமான திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. வாடகைக் காலத்தையும் நீங்கள் சேர விரும்பும் சந்தா திட்டத்தையும் தேர்ந்தெடுக்கவும்.

  6. கட்டணம் செலுத்திவிட்டு கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். பரிவர்த்தனை முழுவதும் டிஜிட்டல் வழியாக நடந்திருந்தால் தொடர்ந்து ஆவணங்களை நீங்கள் பதிவேற்றலாம்.

உங்களது பிராட்பேண்டை எவ்வாறு தேர்வுசெய்வது

  1. உங்களது இன்டர்நெட் பயன்பாட்டைப் புரிந்துகொள்ளுதல்
    உங்கள் வீட்டிற்கு பிராட்பேண்டை வாங்குவதற்கு முன்பு நீங்கள் இணையத்தை எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.. இணைய சேவைகளை எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் அதற்கு எவ்வளவு டேட்டா செலவாகிறது என்பதையும் பட்டியலிடுங்கள். இணைய வேகம், டேட்டா மற்றும் பயன்பாடு குறித்த சுருக்கமான தகவல்களைத் தெரிந்துகொள்ள கீழே உள்ள அட்டவணை உதவும்.

  2. சிறந்த சேவை வழங்குநர்கள் மற்றும் அவர்களின் திட்டங்களைப் பட்டியலிடுதல்
    உங்கள் பகுதியில் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய சேவை வழங்குநர் எது என்பதை அறிந்துகொள்ள, உங்கள் அண்டை வீட்டாரிடம் பேசுங்கள். உங்கள் பகுதியில் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய சேவை வழங்குநரே, சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்கள் இன்டர்நெட் பயன்பாட்டின் அடிப்படையில், உங்கள் பகுதியில் இருக்கும் 4-5 இணைய சேவை வழங்குநர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களின் திட்டங்களையும் கட்டணங்களையும் பட்டியலில் சேருங்கள்.

  3. சலுகைகளை ஒப்பிடுதல்
    உங்கள் பகுதியில் இருக்கும் 4-5 சிறந்த இணைய சேவை வழங்குநர்களின் பெயர்களைப் பட்டியலிட்ட பிறகு, அதில் உள்ள ஒவ்வொரு சேவை வழங்குநரும் என்னென்ன சலுகைகளை வழங்குகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலான ISPகள் அவற்றின் முழுநேர திட்டங்களைச் சலுகைகளுடன் வழங்குகின்றன. உதாரணத்திற்கு, 6 மாதங்களுக்கான திட்டங்கள் பெரும்பாலானவற்றில் ACT ஃபைபர்நெட் இலவச ரௌட்டர் அல்லது கூடுதலாக ஒரு மாதத்திற்கான இணைய சேவை வழங்கப்பட்டு, இலவசமாக நிறுவப்படும். நாளடைவில், நீங்கள் நிறைய சேமிக்க இந்தச் சலுகைகள் உதவும்.

  4. வேகச் சோதனையை மேற்கொள்ளுதல்
    உங்கள் இன்டர்நெட் திட்டத்தை வாங்கிய பிறகு, உங்கள் ISP வழங்கும் வேகத்திற்கான சோதனை முடிவுகளைப் பார்க்க இணைய வேகச் சோதனையை மேற்கொள்ளவும். ஊக்லா வேகச் சோதனையின் மூலம் உங்கள் இன்டர்நெட் வேகத்தை நீங்கள் சோதித்துப் பார்க்கலாம். வேகச் சோதனை முடிவுகளைப் பற்றி இங்கே இன்னும் தெரிந்துகொள்ளலாம்.

இணைய சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும்போது கேட்கப்பட வேண்டிய கேள்விகள்

இணைய சேவை வழங்குநரைத் தேர்வுசெய்வது என்பது ஒரு கடினமான விஷயமாகும். குறிப்பாக, என்ன கேள்விகளைக் கேட்பது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் அது இன்னும் சிரமமாகக்கூடும். நீங்கள் தேர்வு செய்யவிருக்கும் சேவை வழங்குநர் நீங்கள் விரும்பக்கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும் என்றால், கோடிட்ட இடத்தில் நீங்கள் கையொப்பமிடுவதற்கு முன்பு அதைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் நீங்கள் தெரிந்துகொள்வது சூட்சமங்களில் ஒன்று. தீர்க்கமாக முடிவெடுத்துத் தேவையான இணைய சேவையை நீங்கள் வாங்குவதற்கு, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

வயர் வழி அல்லது வயர் இல்லாத (வயர்லெஸ்/மொபைல்) பிராட்பேண்ட் சேவை எனக்குத் தேவைப்படுமா?

புதிய நெட்வொர்க்குக்கு மாறுவதால் நிறைய செலவீனங்கள் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தாலோ உங்களுக்கு உயர் ரக பாதுகாப்பும், செயல்பாடும் தேவைப்படும் என்றாலோ நீங்கள் தேர்வுசெய்ய வேண்டிய சிறந்த விருப்பம் வயர் வழி நெட்வொர்க் ஆக இருக்கக்கூடும். அலுவலக வேலைக்காக நீங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அதிகமாக நகரத் தேவையில்லை எனில் உங்களுக்கு வயர் வழி இணைப்பே போதுமானதாக இருக்கும். செலவு பற்றிய கவலை இல்லை என்றாலும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது அவசியம் என்றாலும் அதிநவீன தொழில்நுட்பம் தேவை என்று நினைத்தாலும், நீங்கள் வயர் இல்லாத நெட்வொர்க்கைப் பயன்படுத்துவது குறித்துத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் இணைய வேகத் தேவைகளைப் பொறுத்து, வயர் அல்லது மொபைல் பிராட்பேண்ட் இணைப்பைத் தேர்வுசெய்வார்கள். ஆனால் நீங்கள் வயர் வழி இணைப்பைத் தேர்வுசெய்வதாக இருந்தால், கேபிள் வேண்டுமா ஃபைபர் வேண்டுமா என்பதையும் நீங்கள் தேர்வுசெய்ய வேண்டியிருக்கும்.

வயர் வழி இணைப்பைத் தேர்வுசெய்வதாக இருந்தால், எனக்கு ஃபைபர் தேவைப்படுமா அல்லது தாமிரம் தேவைப்படுமா?

இந்தியாவில், தாமிரம் சார்ந்த பிராட்பேண்ட் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அந்த இணைப்பை வழங்கும் அதே ISP இன் ஃபிக்சட் டெலிஃபோன் லேண்ட்லைன் இணைப்பும் அடிக்கடி சேர்த்து வழங்கப்படும். இந்தத் துறையில் ADSL, VDSL, VDSL2+ போன்ற பல்வேறு முன்னேற்றங்கள் இருந்தாலும், தாமிரம் சார்ந்த பிராட்பேண்டின் பதிவேற்ற வேகம் 5 முதல் 10 Mbps வரை இருக்கும், அதே சமயம் பதிவிறக்க வேகம் 15 முதல் 70 Mbps வரை இருக்கும், வேகத்தில் சிறிய மாற்றங்கள் காணப்படும். ஒரு இடத்திற்கு ஃபைபர் பிராட்பேண்ட்டைக் கொண்டு வருவதிலும் சிக்கல் உண்டு. ஒரு எல்லைப் பகுதிக்குள் ஃபைபர் பிராட்பேண்டைக் கொண்டு வர, ஃபைபர் ஆப்டிக் இணைப்புகள் அங்கு அமைக்கப்பட வேண்டும். இந்தியாவில் ஃபைபர் பிராட்பேண்ட் இன்னும் குறைவாகவே பயன்படுத்தப்படுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். மறுபுறம், DSL இல் தொலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்படுவதால், தாமிரம் சார்ந்த இன்டர்நெட் இணைப்பு கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடும்.

வேற்றுமை விகிதம் (கண்டென்ஷன் ரேஷியோ) என்றால் என்ன?

ஒரே சமயத்தில் ஒரு இணைப்பிற்கென உள்ள நிலையான பேண்ட்வித்தைப் பகிரக்கூடிய இன்டர்நெட் பயனர்களின் அதிகபட்ச எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் முக்கிய அளவுரு வேற்றுமை விகிதம் ஆகும். இதன் காரணமாக நீங்கள் அதிவேக இணைய இணைப்பைத் தேர்வுசெய்தாலும், அதை அதிக எண்ணிக்கையிலானோர் பயன்படுத்தும் பட்சத்தில் வேற்றுமை விகிதம் அதிகமாக இருக்கும். அத்துடன் ஒரு பயனருக்கான இணைய வேகமும் எப்போதும் குறைவாகவே இருக்கும். உதாரணத்திற்கு வேற்றுமை விகிதம் 1:8 என்று இருந்தால், ஒரே சமயத்தில் 8 வீடுகள் வரை பேண்ட்வித்தைப் பகிர்ந்துகொள்ளலாம். இந்தியாவில் உள்ள பெரும்பாலான ISPகள் தற்போது 1:30 எனும் வேற்றுமை விகிதத்தில் இணைப்பை வழங்குகின்றன. இந்தியாவில் ஃபைபர் டு தி ஹோம் (FTTH) இன்டர்நெட் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதால் தற்போது பிரத்தியேகமான 1:1 பேண்ட்வித் உங்களுக்குக் கிடைத்திருக்கக்கூடும். அதனால் தாமதமோ பகிர்தலோ இல்லாமல் நீங்கள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ற வேகத்தை உங்களால் பெற முடிகிறது.

டேட்டாவிற்கான கட்டுப்பாடுகள் ஏதேனும் உள்ளனவா?

உங்கள் இன்டர்நெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக இணைய சேவை வழங்குநர் விதிக்கும் தடைகளே டேட்டா கட்டுப்பாடுகள் ஆகும். டேட்டா பயன்பாட்டிற்கான வரம்பு அனைத்து இணைய சேவை வழங்குநர்களாலும் அமைக்கப்படாது. ஆனால் அவ்வாறு செய்பவற்றில் சில டேட்டாவிற்கு இணக்கமான வரம்பையும், இணக்கமற்ற வரம்பையும் அமைத்து வழங்கலாம். இணக்கமற்ற டேட்டா வரம்பு வழங்கப்படும் திட்டத்தில், நீங்கள் குறிப்பிட்ட அளவிலான டேட்டாவைப் பயன்படுத்தியவுடன் உங்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் அல்லது இணைப்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்படும்.

வேகத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுமா?

பெரும்பாலான இணைய வழங்குநர்கள் வேகத்திற்கு உத்தரவாதம் வழங்குவதில்லை. ஆனால் நீங்கள் விசாரித்துப் பார்ப்பதில் பாதகம் ஒருபோதும் இருக்காது. வேகத்துடன் செயல்படுவதற்கான உத்தரவாதத்தை வழங்காவிட்டாலும், உங்கள் திட்டத்திற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள வேகத்தில் உங்கள் இணையம் செயல்படவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். கருவிகள் செயலிழப்பதாலோ உங்கள் இணைப்பை அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் பயன்படுத்துவதாலோ வேகம் குறையலாம்.

எனது ACT ஃபைபர்நெட் இணைப்பை எவ்வாறு இயக்குவது?

ACT ஃபைபர்நெட் இணைப்பை இயக்க, நீங்கள் கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்

  1. https://www.actcorp.in/new-broadband-connection-op தளத்திற்குச் செல்லவும் அல்லது ACT ஃபைபர்நெட் செயலியைப் பதிவிறக்கவும்

  2. நீங்கள் விரும்பும் இணைப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்: வீட்டிற்கான பிராட்பேண்ட் அல்லது அலுவலகத்திற்கான பிராட்பேண்ட்.

  3. பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், முகவரி போன்ற உங்களது தனிப்பட்ட விவரங்களைப் படிவத்தில் உள்ளிடவும்.

  4. உங்களுக்கு விருப்பமான திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. வாடகைக் காலத்தையும் நீங்கள் சேர விரும்பும் சந்தா திட்டத்தையும் தேர்ந்தெடுக்கவும்.

  6. கட்டணம் செலுத்திவிட்டு கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். பரிவர்த்தனை முழுவதும் டிஜிட்டல் வழியாக நடந்திருந்தால் தொடர்ந்து ஆவணங்களை நீங்கள் பதிவேற்றலாம்.

புதிய பிராட்பேண்ட் இணைப்பை எவ்வாறு அமைப்பது?

ACT வைஃபை ரௌட்டரை இயக்க, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்

  1. உங்கள் மொபைலில் அமைப்புகளுக்குச் சென்று, வைஃபையை இயக்கிவிட்டு ரௌட்டரின் பெயரை மொபைல் கண்டறியும் வரை காத்திருக்கவும். இணைப்பதற்கு ரௌட்டரின் பெயரை அழுத்தவும். வைஃபை இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய, "வயர்லெஸ் மற்றும் நெட்வொர்க்குகள்" என்பதன் கீழே உள்ள "வைஃபை" விருப்பத்தை அழுத்தவும். ரௌட்டரின் பெயரை மொபைல் கண்டறியும் வரை காத்திருக்கவும். பெயரை வழங்குமாறு கேட்கப்பட்டால் ரௌட்டரின் பெயரைஅழுத்தவும். வைஃபைக்கான கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு 'இணை' என்பதை அழுத்தவும்.

எனது சாதனங்களை ACT ஃபைபர்நெட்டுடன் எவ்வாறு இணைப்பது?

உங்கள் கம்ப்யூட்டரை இணையத்துடன் எவ்வாறு இணைப்பது என்பது குறித்த சுருக்கமான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  1. மோடத்தை இணைத்துவிட்டு ரௌட்டரை அமைக்கவும்

  2. இன்டர்நெட் இணைப்பைச் சரிபார்த்துவிட்டு சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றைச் சரிசெய்யவும்

  3. மோடத்தையும் நெட்வொர்க் பாதுகாப்பையும் அமைக்கவும்

  4. உங்கள் கம்ப்யூட்டரையோ வேறொரு சாதனத்தையோ வயர்லெஸ் நெட்வொர்க்குடன் இணைக்கவும்

நம்பகத்தன்மை முக்கியமானது, அத்துடன் வேகமும் இருந்தால் இன்னும் சிறப்பு.

நீங்கள் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டிய முக்கியமான ஒரு கூறு நம்பகத்தன்மை. அதிக நம்பகத்தன்மையுடைய இணையத்திற்கான விருப்பம் உங்களுக்குத் தேவை, உங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் அது தடைபடாமல் இருக்க வேண்டும். நம்பகத்தன்மையற்ற இணையச் சேவையால் வாடிக்கையாளர்களையும் விற்பனைகளையும் நீங்கள் இழக்க நேரிடும்போது, கம்ப்யூட்டர் செயலிழந்திருக்கும் அந்த நேரம் உங்கள் லாப நஷ்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் அதிகப்படியான இணைப்புகள் வைத்திருந்தால் பேண்ட்வித்தும் அதிகமாகும். கோப்பு பகிர்வு, ஆன்லைனில் காப்புப்பிரதி எடுத்தல் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான வணிகச் செயலிகளுக்கு அதிக பதிவேற்ற வேகம் தேவைப்படுகிறது. எனவே, பதிவேற்றுவதற்கும் பதிவிறக்குவதற்கும் சமமான வேகத்தை வழங்கக்கூடிய ஒரு வேகமான இணைப்பு இருப்பது சிறப்பானதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. வேகமான, நம்பகமான இணைப்பு இருந்தால் இவற்றைச் செய்யலாம் -

  1. கோப்பு விரைவாகப் பதிவிறக்கம்/பதிவேற்றம் செய்யப்படுவதுடன் உற்பத்தித்திறனும் அதிகரிப்பது.

  2. ஆன்லைனில் வாடிக்கையாளர்களுடனும் சக ஊழியர்களுடனும் விரைவாகத் தொடர்புகொள்வது.

  3. சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்கான நல்ல வெப் ஹோஸ்டிங் சேவை வழங்கப்படுவது - வாடிக்கையாளர்கள் பொருட்களைத் தேடும்போதும் இறுதியாகப் பொருளை வாங்கும்போதும் டேட்டா ஏற்ற நேரம் வேகமாக இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவம் கிடைக்கும்.

  4. முக்கியமான இயக்குதளங்கள், மென்பொருள் மற்றும் நச்சு நிரல் எதிர்ப்பிகளுக்கான புதிய பதிப்புகள் விரைவாகப் புதுப்பிக்கப்படுவது.

  5. ஆன்லைனில் வணிகத் தகவல்களை எளிதாக அணுகுவது - உதாரணத்திற்கு, CRM, உட்புற கிளவுட் சேமிப்பகம் போன்றவை.

  • Share

Be Part Of Our Network

Read something you liked?

Find the perfect internet plan for you!

Chat How may i help you?