BROADBAND

பிராட்பேண்ட் VS வைஃபை_ இரண்டுக்கும் இடையிலிருக்கும் வேறுபாடு என்ன?

Thursday, Jul 07, 2022 · 10 mins

674

பிராட்பேண்ட் VS வைஃபை_ இரண்டுக்கும் இடையிலிருக்கும் வேறுபாடு என்ன?

பிராட்பேண்ட் மற்றும் வைஃபை ஆகிய இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று மாற்றாக அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இவை இரண்டும் தனித்தனி விஷயங்கள் தான். அது மட்டும் அல்ல, இணையம் தொடர்பான அடிப்படை விஷயங்களை சரியாக விளங்கிக் கொள்வதற்கு இவை இரண்டினையும் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

எளிமையாகச் சொல்வதானால், கம்பிகள் இல்லாமல் தகவல்களை பரிமாற்றம் செய்ய வைஃபை, ரேடியோ அலைவரிசைகள் மற்றும் சிக்னல்களைப் பயன்படுத்துகிறது. பிராட்பேண்ட் என்பது அதிவேக இணையத்தைப் பயன்படுத்தி தகவல்களை பரிமாற்றம் செய்வது ஆகும்.

பிராட்பேண்ட் இணைப்பு என்றால் என்ன?

பிராட்பேண்ட் என்பது பரந்த பேண்ட்வித் தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கிறது. இணையம் என்பது இரண்டு சாதனங்களுக்கிடையே அனுப்பப்படும் தகவல் என வைத்துக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில், பிராட்பேண்ட் என்பது அந்தத் தகவல் நகரும் வழிப்பாதை ஆகும். ஏஎஸ்எல் (ASL), டிஎஸ்எல் (DSL), கேபிள், ஃபைபர் என பல்வேறு வகையான பிராட்பேண்ட் இணைப்புகள் உள்ளன. அனைத்து தொழில்நுட்பங்களும் தங்கள் பயனர்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் அதன் பயனாளர்களுக்கு சமச்சீரான வேகத்தையும் அதிக அலைவரிசையையும் வழங்கும் சிறந்த தொழில்நுட்பமாகும்.

பிராட்பேண்ட் இணைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

பிராட்பேண்ட், பழைய டயல்-அப் இணைப்புகளால் பயன்படுத்தப்படும் ஒற்றை அலைவரிசையை விட, நிறைய தகவல்களை அனுப்ப வசதியாக பல அலைவரிசைகளைப் பயன்படுத்தி இணையத்தை வழங்குகிறது. இங்கு பிராட்பேண்ட் எனும் சொல் என்பது தகவல் பரிமாற்றத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பேண்ட்களைப் பயன்படுத்துவதைக் குறிப்பதாகும்.

எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால், ஒரே நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய ஒருவழிப் பாதையாக நீங்கள் டயல்-அப்பை எண்ணிக்கொள்ளலாம். அதே சமயம், பிராட்பேண்ட் என்பது பல வாகனங்கள் ஒன்றாகச் செல்லக்கூடிய வகையில் பல பாதைகளைக் கொண்ட நெடுஞ்சாலையாகும். இங்கு ஒவ்வொரு வாகனமும் நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் டேட்டா பாக்கெட் ஆகும்.

ஒரே நேரத்தில் பல டேட்டா பாக்கெட்களின் இணையான பரிமாற்றம், பிராட்பேண்ட் வழியாக, இணையத்தின் வேகத்தை அதிகரிக்கிறது.

வைஃபை என்றால் என்ன?

வைஃபை தொழில்நுட்பம் அடிப்படையில் ரேடியோ அலைவரிசைகள் மற்றும் சிக்னல்களைப் பயன்படுத்தி இரண்டு சாதனங்களுக்கு இடையே வயர்லெஸ் முறையில் தகவல்களைப் பெறவும் அனுப்பவும் செய்கிறது. வைஃபை என்பது பிராட்பேண்டை வயர்லெஸ் முறையில் அணுகக்கூடிய வழிமுறையாக விளங்குகிறது. அனைத்து வைஃபை இணைப்புகளும் 2.4Ghz மற்றும் 5Ghz ஆகிய இரண்டு அதிர்வெண் அலைவரிசைகளில் வேலை செய்கின்றன. 2.4Ghz அதிர்வெண் அலைவரிசை நீண்ட தொலைவுக்கும் குறைந்த அலைவரிசைக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் 5Ghz அதிர்வெண் அலைவரிசை குறைந்த தொலைவுக்கும் அதிகமான அலைவரிசைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இரண்டு அதிர்வெண் அலைவரிசைகளுக்கும் மிகவும் பொருத்தமான வேகம் மற்றும் வரம்பை கீழே உள்ள அட்டவணை சுருக்கமாக விளக்குகிறது.

ஐஇஇஇ (IEEE) தரநிலை

அதிர்வெண்

வேகம்

வரம்பு

802.11

2.4GHz RF (ரேடியோ அதிர்வெண்)

1 முதல் 2Mbps வரை

20 அடி உட்புறங்களில்

802.11a

5GHz

54Mbps வரை

25 முதல் 75 அடி வரை

802.11b

2.4GHz

11Mbps வரை

150 அடி வரை

802.11g

2.4GHz

54Mbps வரை

150 அடி வரை (சுவர்கள் மற்றும் பிற பொருள்கள் வரம்பைப் பாதிக்கும்)

802.11n

2.4GHz & 5GHz

600Mbps வரை

175+ அடி (சுவர்கள் மற்றும் பிற பொருள்கள் வரம்பைப் பாதிக்கும்)

வைஃபை இணைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

அனைத்து வைஃபை இணைப்புகளும் 2.4Ghz மற்றும் 5Ghz என இரண்டு இரண்டு அதிர்வெண் அலைவரிசைகளில் வேலை செய்கின்றன. அதாவது தகவல்களை அனுப்புதல் மற்றும் தகவல்களைப் பெறுதல் ஆகிய எளிய படிகளில் செயல்படுகின்றன. முதலில், தகவலுக்காக இணையத்தை அணுக உங்கள் ரௌட்டர் மற்றும் மோடமிற்கு கோரிக்கை அனுப்பப்படும். பின்னர், விருப்பமான பதில் மோடம் வழியாக ரௌட்டருக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் ரௌட்டர் தகவலை வயர்லெஸ் முறையில் சாதனத்திற்கு அனுப்புகிறது.

பிராட்பேண்ட் மற்றும் வைஃபை - இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்?

பிராட்பேண்ட் என்பது உங்கள் இணைய சேவை வழங்குநரால் வழங்கப்படும் ஒரு வகையான இணைய இணைப்பு ஆகும். வைஃபை என்பது ஒரு தொழில்நுட்பம் மற்றும் இணையத்தை அணுக பிராட்பேண்டுடன் இணைப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாகும். உங்கள் ரௌட்டர் மற்றும் சாதனத்தை நேரடியாக இணைக்கும் LAN கேபிள் வழியாக உங்கள் பிராட்பேண்டை அணுகலாம். இருப்பினும், வைஃபை இணைப்பில் உள்ள நன்மை, இரண்டு சாதனங்களுக்கு இடையே எவ்வித நேரடித் தொடர்பும் அற்ற நிலையில் தகவல்களை அணுகும் திறன் ஆகும்.

உங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்கான அதிவேக இணைய இணைப்பை தேடுகிறீர்கள் என்றால், ACT Fibernet-ன் இணையத் திட்டங்களை நீங்கள் இங்கே பார்க்கலாம்.

Read tips and tricks to increase your wifi speed here

  • Share

Be Part Of Our Network

Related Articles

Most Read Articles

PAY BILL

4 easy ways to pay ACT Fibernet bill online

Monday, Dec 04, 2017 · 2 Mins
1445782

WI-FI

Simple Ways to Secure Your Wi-Fi

Wednesday, May 16, 2018 · 10 mins
540410
Read something you liked?

Find the perfect internet plan for you!

Chat How may i help you?