இன்டர்நெட் ஸ்பீட் பற்றிய தொடக்க வழிகாட்டி - இன்டர்நெட் ஸ்பீட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன
Monday, Feb 28, 2022 · 7 minutes
GENERIC
Monday, Feb 28, 2022 · 7 minutes
இணையம்
இணைய வேகம் தொடர்பான தொடக்கநிலை வழிகாட்டி - இணைய வேகம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது
பொதுவாக, இணைய சேவை என்றதுமே நம் நினைவிற்கு வருவது அதன் வேகம் தான். மெகாபிட்/வினாடி (Mbps), ஜிகாபிட் (Gigabit), ஃபைபர் (fibre) மற்றும் பிராட்பேண்ட் (broadband) போன்ற இணையம் தொடர்பான பற்பல சொற்களால் ஒருவர் சுலபமாகக் குழப்பமடைந்துவிட முடியும். அதனால் தான், நீங்கள் இணைய வேகம் பற்றி முற்றிலுமாக தெரிந்து கொள்ளும் பொருட்டு, நாங்கள் இந்த இணைய வேக வழிகாட்டியை உருவாக்கியுள்ளோம்.
இணைய வேகம் பற்றி உங்களுக்குச் சந்தேகங்கள் அல்லது குழப்பங்கள் இருந்தால், அவை உங்களுக்கு மட்டுமே இருப்பதில்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இணைய வேகத்தைப் பற்றிய உங்களது கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் எங்களால் முடிந்த அளவு தெளிவான பதில்களை அளித்து உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் முயன்றுள்ளோம்.
இணைய வேகம் என்றால் என்ன?
இணைய வேகம் என்றால் என்ன?
முன்பு கூறியது போல், இணைய வேகம் என்பது நீங்கள் தேர்வு செய்துள்ள இணையத் திட்டத்தின் அடிப்படையில் உங்களுக்கு ஒதுக்கப்படும் பேண்ட்வித் ஆகும். இதில், பேண்ட்வித் என்பது உங்களால் பயன்படுத்தக்கூடிய தரவின் (டேட்டாவின்) அளவைக் குறிக்கின்றது. இது பொதுவாக, வினாடிகளில் அளவிடப்படுகிறது. உதாரணமாக, உங்கள் இணைய வேகம் 10 Mbps ஆக உள்ளது என்றால், நீங்கள் ஒரு வினாடிக்கு 10 மெகாபிட்கள் வரை தரவைப் (டேட்டாவை) பெறலாம் அல்லது அனுப்பலாம் என்றே பொருள்படுகிறது.
இணைய வேகச் சோதனைகள்
நீங்கள் என்றாவது உங்கள் பிராட்பேண்ட் இணைய வேகம் எவ்வளவு உள்ளது என்பது குறித்துச் சரிபார்த்திருந்தால், நீங்கள் அதற்கு ஊக்லா (Ookla) வேகச் சோதனையைப் பயன்படுத்தி இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஊக்லா நிகர குறியீட்டெண் (நெட் இண்டெக்ஸ்) ஆனது Speedtest.net என்ற தளத்திலிருந்து தகவலை எடுத்து, அதனை ஒழுங்குபடுத்தி, பயன்படுத்துவதற்கு எளிதாக ஆக்குகிறது.
“என்னுடைய இடத்திற்குச் செல்க” லிங்கை கிளிக் செய்தால், நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள அனைத்து ISP-க்களும் பட்டியலிடப்பட்டுள்ள பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு நீங்கள் ஏதேனும் குறிப்பிட்ட நகரத்திற்கும் தேடலாம். பொதுவாக, ISP-க்கள் தங்கள் சந்தாதாரர்கள், Speedtest.net மூலம் சமீபத்தில் செய்த பதிவிறக்க வேகச் சோதனை முடிவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, அங்கு எந்த இணைய சேவை வழங்குநர்கள் உண்மையில் அதிக வேகத்தை வழங்குகிறார்கள் என்பதையும் நீங்கள் காணலாம். கூடுதலாக, ஊக்லா வேகச் சோதனையானது பல்வேறு நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே உள்ள சராசரி இணைய வேகத்தை ஒப்பிடவும் அனுமதிக்கிறது. இதன் மூலம், ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கக் கூடிய இணைய வேகம் பற்றிய தெளிவு உங்களுக்குக் கிடைக்கும். பதிவேற்றம் செய்யும் வேகம், இணைப்பின் தரம், விலை மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் இவற்றின் தரவரிசைகளைப் பார்க்கலாம்.
பதிவேற்ற வேகத்திற்கு எதிராகப் பதிவிறக்க வேகம்
மிகவும் நம்பகமான வேகச் சோதனை ஆய்வு வழங்குநர்கள் மூன்று முக்கியமான இணைய அளவீடுகளை அளவிட்டு, அது குறித்த அறிக்கையை வழங்குகிறார்கள்: பதிவேற்றம் செய்யும் வேகம், பதிவிறக்கம் செய்யும் வேகம், பிங் (ping) மற்றும் லேடன்சி.
1. பதிவிறக்க வேகம்:
பதிவிறக்க வேகம் என்பது படங்கள், வீடியோ ஃபைல்கள் போன்ற டேட்டாவை பெற ஒரு வினாடிக்கு எவ்வளவு மெகாபிட்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. ஆன்லைனில் ஏதேனும் ஆடியோ கேட்பது, இ-மெயில்/மின்னஞ்சலைப் பெறுவது, நெட்ஃபிளிக்ஸ் அல்லது பிரைம் வீடியோ போன்ற சேவைகளில் ஸ்ட்ரீமிங் (streaming) செய்வது போன்ற செயல்கள் யாவுமே பதிவிறக்கம் செய்வதைக் குறிக்கிறது. பொதுவாக, 25Mbps பதிவிறக்க வேகமானது வீடியோ ஸ்ட்ரீமிங், வீடியோ அழைப்புகள் போன்ற செயல்கள் செய்ய உகந்ததாகக் கருதப்படுகிறது
2. பதிவேற்ற வேகம்:
பதிவேற்ற வேகம் என்பது உங்கள் இணைய இணைப்பின் மூலம் மற்றொரு சாதனத்திற்கு நீங்கள் அனுப்பக்கூடிய டேட்டாவின் மெகாபிட்களின் அளவைக் குறிக்கின்றது. பொதுவாக, நாம் அனைவரும் பதிவிறக்கம் செய்திருக்கிறோம் மற்றும் அது பற்றி நமக்கு நன்கு தெரியும் என்றாலும் கூட, டேட்டாவை பதிவேற்றுதல் என்பது பதிவிறக்கம் செய்வதற்கு நேர்மாறான ஒன்றாகும். அவை வேறொன்றுமில்லை, மின்னஞ்சல் அனுப்புவது, வீடியோ கேம் விளையாடுவது போன்றவை தான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் வீடியோ அழைப்பு செய்யும் போது, உங்கள் வீடியோ மங்கலாக அவர்களுக்குத் தெரிந்தால், உங்கள் பதிவேற்ற வேகத்தில் ஏதோ சிக்கல் உள்ளது என்பதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். வழக்கமாக, வீட்டுப் பயன்பாடு, வீடியோ அழைப்பு, முதலியவற்றிற்கு 3Mbps பதிவேற்ற வேகம் போதுமானதாக இருக்கும்.
3.பிங்:
பிங் என்பது பதிலைக் கோரி ஒரு சேவையகத்திற்கு அனுப்பப்படும் கோரிக்கையே ஆகும். இந்த செயல்முறையில், சேவையகம், ஒரே பாக்கெட்டில் (இருக்கும் பட்சத்தில்) பதிலைத் திருப்பி அனுப்பிவிடும். இந்த பரிமாற்றம் மில்லி வினாடிகளில் கணக்கிடப்படுகிறது. பிங் நேரம் என்பது கோரிக்கை அனுப்புவதிலிருந்து சாதனத்திற்குப் பதில் கிடைப்பது வரை உள்ள செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தின் அளவைக் குறிக்கின்றது. பொதுவாக, கேம் விளையாடுபவர்கள், பிங் நேரம், அதாவது ஒரு கோரிக்கையை ஹோஸ்ட்-க்கு அனுப்பி, அதற்கான பதிலைப் பெறும் நேரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, பிங் சோதனை ஆய்வுகளைப் பயன்படுத்துகின்றனர். பிங் நேரம் அதிகமாக இருந்தால், உங்களது டேட்டா/தரவு பரிமாற்ற தாமதங்கள் அதிகமாக இருக்கும்.
4. ஜிட்டர்:
தொழில்நுட்ப ரீதியாகச் சொல்ல வேண்டுமெனில், ஜிட்டர் என்பது நாம் அனுபவிக்கும் லேடன்சியில் நிகழும் மாறுபாடே ஆகும். உதாரணத்திற்கு, நீங்கள் விளையாடும் சர்வரில், வழக்கமாக, உங்களுக்கு 20ms லேடன்சி இருக்கக் கூடும். அது மீண்டும் 20ms ஆகக் குறைவதற்கு முன் உங்களுக்கு 70ms அல்லது 220ms ஸ்பைக்ஸ் கூட கிடைக்கக் கூடும். இவ்வாறு, ௧௦௦ம்ஸ்-இன் கீழ் உள்ள லேடன்சி விளையாடுவதற்கு ஏற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. எனினும், அது 25ms-க்கு கீழ் இருப்பதையே பெரும்பாலான கேம் விளையாடுபவர்கள் விரும்புகின்றனர்.
பிட்களுக்கு (bit) எதிராக பைட்கள் (byte)
வேகத்தின் அடிப்படையில் நமக்குத் தேவையான இணைய இணைப்பைத் தேடும்போது, நம்மை அதிகமாக குழப்பக்கூடிய விஷயங்களில் ஒன்று இணைய வேகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கள் ஆகும்: Mbps, MBps, kbps, Gbps; இவற்றின் அர்த்தம் என்ன?
இவை ஒரு வினாடிக்கு அனுப்பப்படும் டேட்டாவின் அளவைக் குறிக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் என்ன அர்த்தம் என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்:
kbps –கிலோபிட்கள்/வினாடி. டயல் அப் (எடுத்துக்காட்டாக 56k) மற்றும் குறைந்த வேக DSL பற்றிப் பேசும் போது இது பயன்படுத்தப்படுகிறது.
Mbps or mbps – மெகாபிட்கள்/வினாடி. இதனைப் பலர் மெகாபைட்களுடன் குழப்பிக் கொள்வதும் உண்டு. இவை இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட, இதன் சுருக்கத்தில் “b” என்பது மாறுபடுத்தி எழுதப்படுகிறது; Mbps = மெகாபிட்கள் and MBps = மெகாபைட்கள்.
MBps – மெகாபைட்கள்/வினாடி. மெகாபைட்கள், பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படும் இணையத் திட்டங்களில் பயன்படுத்தப்படுவதில்லை.
gbps – கிகாபிட்கள்/வினாடி. கிகாபிட்கள் பொதுவாக அதிக டேட்டா பயன்படுத்துபவர்கள், மற்றும் சிறு வணிகம் கொண்டுள்ளவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
பிராட்பேண்ட்டின் வகைகள்: ஃபைருக்கு எதிராக கேபிளுக்கு (cable) எதிராக டி.எஸ்.எல் (DSL)
இலக்கமுறை சந்தாதாரர் தடம் (DSL):
டி.எஸ்.எல் என்பது தொலைபேசி இணைப்புகள் மூலம் டேட்டா கடத்தப்படும் ஒரு இணைய இணைப்பைக் குறிக்கின்றது. பொதுவாக, தொலைபேசி இணைப்புகள் தாமிரத்தால் செய்யப்படுகின்றன. தாமிரம் ஒரு சிறந்த கடத்தியாக இருந்தும், டி.எஸ்.எல் இணைப்பால் கேபிள் அல்லது ஃபைபர்நெட் இணைய இணைப்பு போன்று வேகமாக டேட்டாவை கடத்த முடியாது. உங்கள் வீடு மற்றும் தொலைபேசி வழங்குநரின் அலுவலகத்திற்கு இடையேயான தூரம், உங்கள் டி.எஸ்.எல் இணைப்பு வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற முடிவைப் பெரிதும் பாதிக்கும் ஒரு முக்கியமான காரணியாகும். இதன் பொருள், என்னவென்றால், நீங்கள் பிரதான இணைப்பிருந்து அதிக தூரத்திலிருந்தால், அதற்கேற்றாற்போல், சிக்னல் பலவீனமாகும், மற்றும் இணைய இணைப்பு மெதுவாக ஆகிவிடும்.
கேபிள்:
கேபிள் இணைய இணைப்புகள் கோஆக்சியல் (coaxial) கேபிள்கள் பயன்படுத்தும் தொலைபேசி இணைப்புகள் மூலம் செயல்படுகிறது. இது இலக்கமுறை சந்தாதாரர் தடம் இணைப்பை விட அதிக பேண்ட்வித் கொண்டிருக்கும். DSL-ஐ ஒப்பிடுகையில், கேபிள் இணைப்பின் இணைப்பு, தூரத்தைப் பொறுத்து அமையாது. இருப்பினும், தனிப்பயனாக்கப்பட்ட தொலைபேசி இணைப்பாக உள்ள DSL-ஐப் போல் அல்லாமல், கேபிள் இணைப்புகள் பொதுவாகப் பயனர்கள் இடையே பகிரப்படுகிறது. இதற்கு பேண்ட்வித் பயனர்களிடையே பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்று அர்த்தம். மேலும், இது கண்டிப்பாகக் குறைந்த பாதுகாப்புடனான தேர்வாகும். கேபிள் இணைப்புகள் DSL-ஐ விட 3 முதல் 4 மடங்கு வேகம் கொண்டிருக்கும். அதாவது, வழக்கமாக இது 10-50 Mbps வேகத்தை வழங்குகிறது.
ஃபைபர்நெட்:
இணையச் சேவை வணிகத்தில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் தான் சமீபத்திய தொழில்நுட்பம் ஆகும். இந்த இணைப்புகள் ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைப் பயன்படுத்துகின்றன. இவை ஒளியின் வேகத்திற்கு இணையாக டேட்டாவை கடத்தக் கூடியவை. கேபிள் அல்லது DSL போல் அல்லாமல், இதில் பரிமாற்றம் கிளாஸ் (glass) மூலம் நிகழ்கிறது. கிளாஸ் அனைத்து வகை குறுக்கீடுகளாலும் பாதிக்கப்படாமல் இருக்கக்கூடிய தன்மை கொண்டது. ஃபைபர் இணைப்புகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை நேரடி இணைய அணுகல் (DIA) மற்றும் ஃபைபர்நெட் பிராட்பேண்ட் ஆகும். பொதுவாக, நேரடி இணைய அணுகல் இணைப்பை, வணிகங்களால் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது ஒரு பிரத்தியேக இணைய இணைப்பாகும். மேலும், இது அதிக பாதுகாப்பானது மற்றும் கூடுதல் இணைப்பு நம்பகத்தன்மை அளிக்கிறது. ஃபைபர்நெட் பிராட்பேண்ட் வீடுகளில் தனிநபர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஃபைபர்நெட் வேகம் 150 Mbps-இல் இருந்து 1000 Mbps-வரை இருக்கும்.
பேண்ட்வித் மற்றும் லேடன்சி
இணையச் சேவை வழங்குநர்கள் அதிகபட்ச பதிவிறக்க பேண்ட்வித்தைப் பொறுத்து, தங்கள் இணையத் திட்ட வேகத்தை வெளிப்படுத்துவார்கள்.
பேண்ட்வித் என்பது ஒவ்வொரு வினாடியும் உங்கள் கணினிக்கு உங்கள் இணையம் எவ்வளவு டேட்டாவை அனுப்பலாம் மற்றும் பெறலாம் என்பதைக் குறிக்கிறது. லேடன்சி என்பது இந்தத் தகவல் உங்கள் கணினிக்குச் சென்றடைய எடுத்துக்கொள்ளும் மொத்த நேரத்தைக் குறிக்கின்றது.
இணைய வேகத்தை நாம் லேடன்சி மூலம் அல்லாமல் பேண்ட்வித் மூலம் ஏன் கணக்கிடுகிறோம் என்று பலருக்கு யோசனையாக இருக்கும். லேடன்சி என்பது ஒரு சில மணித்துளிகளில் மாறுபடும், இது கேமிங் செய்வதற்கு முக்கியமாக இருக்கலாம். ஆனால், பிற ஆன்லைன் செயல்பாடுகளுக்கு இது அவ்வளவு முக்கியமான ஒன்று அல்ல.
உங்களுக்கு எவ்வளவு இணைய வேகம் தேவைப்படும்?
பொதுவாக, பயனர்களுக்கு ஒரு முழு HD தர வீடியோவை ஸ்ட்ரீம் செய்ய குறைந்தபட்சம் 10 Mbps வேகமும், 4K அல்ட்ரா HD வீடியோவை ஸ்ட்ரீம் செய்ய 25 Mbps இணைய வேகம் இருக்க வேண்டும் என்று நெட்ஃபிளிக்ஸ் கூறுகிறது. எனினும், நீங்கள் ஒரே நேரத்தில் பல சாதனங்களை இணைக்க வேண்டுமெனில், அதற்கு நீங்கள் அதிவேக இணைப்பைத் தான் தேர்வு செய்ய வேண்டும். இது பிற ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் யூடியூப், டிவிச் போன்ற கேமிங் சேவைகளுக்கும் பொருந்தும்.
அதே போல், பல சாதனங்கள் இணைக்கப்பட அதிக பேண்ட்வித் தேவைப்படும். நீங்கள் 4K வீடியோ ஸ்ட்ரீம் செய்ய விரும்புவதோடு, பல சாதனங்களை ஒரே நேரத்தில் உங்கள் இணைய இணைப்புடன் இணைக்க விரும்பினால், நீங்கள் கண்டிப்பாக அதிவேக பதிவிறக்க வேகத்தை, அதாவது அனைவருக்கும் ஏதுவான 200 Mbps வேகத்தைப் பெறுவது அவசியமாகும்.
உங்கள் இணையப் பயன்பாட்டிற்கு அதிக பேண்ட்வித் தேவைப்படுமானால், நீங்கள் கிகாபிட் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.
குறைவான இணைய வேகம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அதனைச் சரி செய்வதற்கான வழிகள்:
இணைய வேகத்தை நாங்கள் குறிப்பிட்டுள்ள பின்வரும் பல காரணிகள் பாதிக்கக் கூடும். அவை:
1. உங்கள் பிராட்பேண்ட் நெட்வொர்க்
ஃபைபர்நெட் மூலம் ஆக்ட் (ACT) ஃபைபர்நெட் உங்கள் வீட்டிற்குச் சிறந்த இணையச் சேவையை வழங்குகிறது. எனினும், DSL மற்றும் குறைந்த பிராட்பேண்ட் சேவைகள், பொதுவாக, தாமிரம் கொண்டு கம்பியிடப்படுகின்றன. பெரும்பாலான அதிவேக பிராட்பேண்ட் சேவைகள் ஹைப்ரிட் ஃபைபர் மற்றும் தாமிர நெட்வொர்க் மூலமாக இணையத்தை வழங்குகின்றன. ஆக்ட் (ACT) ஃபைபர்நெட் 100% ஃபைபர் நெட்வொர்க் மூலம் உங்கள் வீட்டிற்கு நேரடியாக இணையத்தைச் சிறந்த முறையில் வழங்குகிறது.
2. ஹோம் நெட்வொர்க்
நீங்கள் இணைய இணைப்பு மூலம் டேட்டாவை அனுப்பும் அல்லது பெறும் விகிதத்தை உங்கள் வீட்டில் நிலவும் பல காரணிகள் பாதிக்கக் கூடும். அவை பின்வருமாறு:
வயரிங் பழையதாக இருந்தால், அதன் காரணமாக இணைப்பும் பலவீனமடையக் கூடும்.
உங்கள் ரவுட்டர் மற்றும் சாதனத்திற்கு இடையேயான தூரம். எப்பொழுதுமே உங்கள் ரவுட்டரை மையத்தில் வைப்பதே நல்லதாகும்.
நீங்கள் பயன்படுத்தி வரும் ரவுட்டர் மற்றும் அதன் பயன்பாட்டுக் காலம். இணையத் திட்டத்திற்கு ஏற்றவாறு, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை அடிக்கடி உங்கள் ரவுட்டரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் சாதனங்களின் எண்ணிக்கை. இணைய பேண்ட்வித்-இல் இணைக்கப்பட்டிருக்கும் சாதனங்களின் எண்ணிக்கை இணைப்பின் செயல்பாட்டைப் பாதித்து அதன் வேகத்தைக் குறைத்துவிடும்.
3. பயன்படுத்தப்படும் இணைப்பின் வகை
இணைப்பின் வகைகள்
உங்கள் வீட்டில், நீங்கள் வயருடன் கூடிய ஈதர்நெட் அல்லது வயர்லெஸ் இணைப்பின் மூலம் இணைய இணைப்பைப் பெறலாம். உங்கள் சுவர் அல்லது ரவுட்டர் மீதுள்ள ஈதர்நெட் போர்ட் உடன் இணைக்கப்பட்ட Cat5e அல்லது Cat6 கம்பிகளை வயர்ட் கேபிள் இணைப்புகள் பயன்படுத்துகின்றன. கம்பி இணைப்புகள் நிலையான செயல்திறன் மற்றும் வேகத்தை வழங்குகின்றன. வயர்லெஸ் இணைப்புகள் உங்கள் வீட்டின் வழியாக எங்கு வேண்டுமானாலும் செல்லும் தன்மையுடையது. ஆனால், இது வயர்ட் இணைப்பைப் போன்று வேகமாக இருக்காது. உங்கள் ரவுட்டருக்கு மிக அருகிலுள்ள இடத்தில் தான் சிறந்த Wi-Fi சிக்னலைப் பெறுவீர்கள், அதுவும், குறைவான சாதனங்கள் இணைக்கப்பட்டிருக்கும் போது மட்டுமே.
4. சாதனங்களின் வகை மற்றும் எண்ணிக்கை
அனைத்து சாதனங்களும் தங்களால் அடையக்கூடிய அதிகபட்ச இணைய வேகத்தைக் கொண்டிருக்கும். இருப்பினும், அந்த இணைய வேகம் உங்கள் இணையச் சேவை திட்டத்தைப் போன்ற அதே வேகத்தைக் கொண்டிருக்காது. உதாரணமாக, உங்கள் பழைய லேப்டாப் அல்லது மொபைல் 20Mbps-ஐத் தான் ஆதரிக்கும், ஆனால் உங்களிடம் 1Gbps இணையத் திட்டம் இருந்தால், உங்கள் லேப்டாப்-ஆல் கண்டிப்பாக 20 Mbps வேகத்தைத் தாண்டி செயல்பட இயலாது.
5. தொலைக்காட்சி மற்றும் இணைய வேகம்
பல சூழ்நிலைகளில், உங்கள் வீட்டில் உள்ள தொலைக்காட்சி மற்றும் இணைய இணைப்புகள் ஒரே கேபிளின் வழியாக வரக்கூடும். ஒரே சமயத்தில் இரண்டு சேவைகளையும் பயன்படுத்துவது, அதிக பேண்ட்வித்தை எடுத்துக் கொள்ளும். மேலும், இது உங்கள் இணையப் பதிவிறக்க வேகத்தையும் பாதிக்கக் கூடும். உதாரணத்திற்கு, ஒரே நேரத்தில் பல HD நிகழ்ச்சிகளைக் காண்பது அல்லது உங்கள் கணினியில் ஒரு முழு படத்தை HD தரத்தில் பதிவிறக்கம் செய்வது போன்றவை அதிக டேட்டாவை எடுத்துக் கொள்ளும். இது, உங்கள் வீட்டு இணைய நெட்வொர்க்கில் வேறு எந்த பயன்பாடும் நடக்காதபோது இருக்கும் இணைய வேகத்துடன் ஒப்பிடும்போது, குறைவாகவே இருக்கும்.
6. நீங்கள் பயன்படுத்தும் பிற நெட்வொர்க் மற்றும் இணையதளங்கள்
சில நேரங்களில், நீங்கள் பயன்படுத்தும் இணையதளம், அதே வேகத்தில் உங்களுக்கு சேவையை வழங்காமல் போகலாம். நீங்கள் இணையதளத்தில் தேடும் போது, இந்த விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:
பிற இணையதளங்கள் உங்கள் இணைய திட்டத்தைப் போன்ற அதே இணைய வேகத்தைக் கொண்டிருக்காமல் இருக்கலாம்.
இணையதள சர்வர் திறன்கள் கூட உங்கள் இணைய வேகம் மற்றும் அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
அது மட்டுமல்ல, இணையதளங்கள் வேறு இணைய சேவை வழங்குநர்கள் கொண்டு கூட உங்களுக்கு டேட்டாவை திருப்பி அனுப்பக் கூடும். இந்த மாறுதல்கள் கூட, உங்கள் இணைய வேகத்தை பாதிக்கக் கூடும்.
இணையதளத்தின் பீக் நேரத்தின் போது சர்ஃபிங் செய்வது கூட குறைவான வேகத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
ஏதேனும் காரணத்தினால், நீங்கள் உங்கள் இணைய இணைப்பில் பிரச்சனையை எதிர்கொண்டால், அவற்றில் இருந்து எளிதில் விடுபட நீங்கள் கண்டிப்பாக ஆக்ட் (ACT) ஃபைபர் நெட்டை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் உள்ள திட்டங்கள் பற்றி இங்கு நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
A referral link has been sent to your friend.
Once your friend completes their installation, you'll receive a notification about a 25% discount on your next bill
Please wait while we redirect you
One of our representatives will reach out to you shortly
One of our representatives will reach out to your shortly
Please wait while we redirect you
Please enter your registered phone number to proceed
Please enter correct OTP to proceed
Dear customer you are successfully subscribed
Please wait while we redirect you
Your ACT Shield subscription has been successfully deactivated
Dear user, Your account doesn't have an active subscription
Dear customer Entertainment pack is already activated.
Please wait while we redirect you