INTERNET

100 MBPS - இன்றைய காலகட்டத்தில் ஏன் நமக்குக் குறைந்தபட்சம் 100 MBPS இணைய வேகம் தேவைப்படுகிறது.

Thursday, Dec 16, 2021 · 10 mins

451

100 Mbps இணைய வேகமானது எந்தளவிற்கு சிறந்தது?

பெரும்பாலான தகுதி தரநிலைகளின்படி, 100 Mbps-க்கு மேற்பட்ட எந்த இணைய வேகமும் "வேகமானதாக" கருதப்படுகிறது. 100 Mbps வேகமாகவே இருந்தாலும், இணைய இணைப்பைப் பயன்படுத்தும் அனுபவத்தைத் தீர்மானிப்பதற்கென பல விஷயங்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு:

ஒரே நேரத்தில் எத்தனை சாதனங்களை இணைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன?

நெட்ஃபிளிக்ஸ், யூடியூப் போன்ற தளங்களிலிருந்து எத்தனை பேர் வீடியோவைப் பதிவிறக்குகிறார்கள்?

ஆன்லைனில் நடக்கும் போட்டி சார்ந்த விளையாட்டிற்கு (கேமிங்கிற்கு), உங்கள் வீட்டு வைஃபையைப் பயன்படுத்துகிறீர்களா?

உங்கள் பணியின் காரணத்தினால், அவ்வப்போது பெரிய ஃபைல்களை அனுப்ப வேண்டியிருக்குமா?

நீங்கள் வழக்கமாக 4K வீடியோவை பதிவிறக்குவீர்களா, அல்லது நீங்கள் ஆன்லைனில் அடிப்படை செயல்களை மட்டுமே செய்வீர்களா?

நீங்கள் கேம் விளையாடும் போது வேகத்தில் பின்னடைவு ஏற்பட்டாலோ அல்லது உங்கள் வெப்சைட் லோட் ஆகச் சிறிது நேரம் எடுத்துக்கொண்டாலோ, நீங்கள் மிக எளிதாக எரிச்சலாபவரா?

உங்களுக்கு எவ்வளவு இணைய வேகம் தேவை?

பொதுவாக, பயனர்களுக்கு ஒரு முழு HD தர வீடியோவை ஸ்ட்ரீம் செய்யக் குறைந்தபட்சம் 10 Mbps வேகமும், 4K அல்ட்ரா HD வீடியோவை ஸ்ட்ரீம் செய்ய 25 Mbps இணைய வேகம் இருக்க வேண்டும் என்று நெட்ஃபிளிக்ஸ் கூறுகிறது. எனினும், நீங்கள் ஒரே நேரத்தில் பல சாதனங்களை இணைக்க வேண்டுமெனில், அதற்கு நீங்கள் அதிவேக இணைப்பைத் தான் தேர்வு செய்ய வேண்டும். இது பிற ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் யூடியூப், டிவிச் போன்ற கேமிங் சேவைகளுக்கும் பொருந்தும்.

அதே போல், பல சாதனங்கள் இணைக்கப்பட அதிக பேண்ட்வித் தேவைப்படும். நீங்கள் 4K வீடியோ ஸ்ட்ரீம் செய்ய விரும்புவதோடு, பல சாதனங்களை ஒரே நேரத்தில் உங்கள் இணைய இணைப்புடன் இணைக்க விரும்பினால், நீங்கள் கண்டிப்பாக அதிவேக பதிவிறக்க வேகத்தை, அதாவது அனைவருக்கும் ஏதுவான 200 Mbps வேகத்தைப் பெறுவது அவசியமாகும்.

உங்கள் இணையப் பயன்பாட்டிற்கு அதிக பேண்ட்வித் தேவைப்படுமானால், நீங்கள் கிகாபிட் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.

100Mbps வேகம் என்பது நல்ல பதிவிறக்கத்திற்கான வேகமா?

Looking for an internet plans that
offer 24x7 assured speeds?

Connect now to get the best of broadband plans and get additional offers on:

100 Mbps இணையம் 12.5 MB/வினாடி பரிமாற்ற விகிதங்களை வழங்குகிறது. ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்பு மூலம் சமமான பதிவேற்ற வேகம் வழங்கப்படுகிறது. 255 MB ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்பது இந்த வேகத்தில் சுமார் 21 விநாடிகளிலேயே மேம்படுத்தப்பட்டுவிடும். DSL மற்றும் காப்பர் கேபிள் லைன்களின் பதிவேற்றத்திற்கான வேகம் 5-10 Mbps இல் மட்டுமே, அதாவது 250 MB ஃபைலை பதிவேற்றம் செய்ய சுமார் 3 நிமிடங்கள் தேவை.

100 Mbps ஃபைபர் இணைப்பை உபயோகிப்பதன் மூலம் தங்கு தடையின்றி பணிபுரிய முடியும். அத்தகைய சிறந்த பயன்களாலும், உங்கள் வணிக இலக்குகளை நோக்கி முன்னேறும் உங்களது உத்வேகத்துடனும், நீங்கள் உங்கள் சுய தரநிலைகளையே எளிதில் கடந்து வெற்றி கண்டுவிடுவீர்கள். இந்த வேகத்தில், வெப்பினார்கள் மற்றும் ஊழியருக்கான பயிற்சி வீடியோக்கள் போன்றவற்றைப் பதிவிறக்க ஒரு சில வினாடிகளே போதுமானதாக இருக்கும்.

பெரும்பாலானவர்களின் கேள்வி, "ஒரு சிறந்த பதிவிறக்கத்திற்கான வேகம் எவ்வளவு?" நீங்கள் மிக பொதுவாகக் கேட்கும் பதிலாக இருப்பது 100 Mbps மட்டும் தான், ஆனால் 100 Mbps என்பது எவ்வளவு வேகமாக இருக்கும்?

ஒரு mbps (வினாடிக்கு மெகாபிட்) என்பது எட்டு பைட் ஆகும். இது விளக்குவது என்னவெனில், 100MB பைலை 100 Mbps-இல் பதிவிறக்க உங்களுக்கு 8 வினாடிகள் ஆகும். நீங்கள் இங்கு உங்கள் டேட்டா பரிமாற்றத்திற்கான திட்டங்களை அறிந்து கொண்டால் மட்டும் போதும், உங்களால் உங்கள் மாதாந்திர இணையத் தேவையை மிக சுலபமாக அளவிட முடியும்.

நினைவில் கொள்ளுங்கள், இருப்பினும், நீங்கள் ஆன்லைன் கேமிங்கை ரசித்து விளையாடுபவராக இருப்பின், பிராட்பேண்ட் வேகம் என்பது ஒரு பிங் அனுப்புவதற்கு மிகக் குறைவான தொடர்பைக் கொண்டது. ஒரு கம்பியூட்டர் நெட்வொர்க்கில், பிங் என்பது லேடன்சியின் கூட்டுத் தொகையாகும். மெதுவான பிங்ஸ் என்றால் வேகமான பரிமாற்றங்களைக் குறிக்கிறது. மேலும், அது எந்தவித தங்குதடையற்ற ஆன்லைன் கேமிங்கை அனுபவிப்பதைக் குறிக்கிறது. இங்குக் கேள்வியென்பது "25mbps வேகமானதா?" என்பது யதார்த்தத்தில் புதிய அர்த்தத்தைப் பெறுகிறது என்பதுதான் இல்லையா?

இறுதிக் கருத்து: 100 Mbps என்பதே இன்றைய காலகட்டத்தின் நவீன குடும்பங்களுக்குத் தேவையான வேகம்.

எனவே, உங்களுக்கு எவ்வளவு வேகம் வேண்டும்? உங்களுக்கு அதிக விவரங்களை ஆராய்வதற்கான நேரம் இல்லை என்றால் நீங்கள் குறைந்த பட்சம் 100 Mbps பதிவிறக்க வேகம் கொண்ட திட்டத்தைப் பெறுவதை உறுதி செய்யுங்கள். இதுவே பெரும்பாலான மக்களுக்கு 'சாலச் சிறந்தது'.

  • Share

Be Part Of Our Network

Read something you liked?

Find the perfect internet plan for you!