Footer Bottom Menu

ஸ்ட்ரீமிங் ஸ்பீட் உங்களுக்கு எவ்வளவு இன்டர்நெட் ஸ்பீட் தேவை மற்றும் எதற்கு

  • 34

  • 28 Feb 2022

  • 3 minutes

ஸ்ட்ரீமிங் ஸ்பீட் உங்களுக்கு எவ்வளவு இன்டர்நெட் ஸ்பீட் தேவை மற்றும் எதற்கு

அதிவேக இன்டர்நெட் 

 

ஸ்ட்ரீமிங் வேகம்(Streaming speed); உங்களுக்கு எவ்வளவு வேண்டும் மற்றும் எதற்காக வேண்டும்?

 

இன்டர்நெட் சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும் போது, நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களில் அதிமுக்கியமான ஒன்று இன்டர்நெட் வேகம் ஆகும். நீங்கள் ஒரு வேலையை எவ்வளவு விரைவாகச் செய்து முடிக்கிறீர்கள் என்பதையும், ஒரே நேரத்தில் எவ்வளவு வேலைகளை உங்கள் நெட்வொர்க் கையாள முடியும் என்பதையும், வேகம் தீர்மானிக்கிறது. 

 

 

ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங்-கிற்கு தேவையான குறைந்தபட்ச இன்டர்நெட் வேகம் என்ன?

 

பொதுவாக, லைவ் ஸ்ட்ரீமிங்-கிற்கு (480p ஸ்டான்டர்டு டெஃபனிஷன்) குறைந்தபட்சமாக 3 Mbps அளவு இன்டர்நெட் வேகம் பரிந்துரைக்கப்படுகிறது. ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு இடையே குறைந்தபட்ச பதிவிறக்க வேகம் மாறும். பல சாதனங்கள் ஒரே நேரத்தில் இன்டர்நெட்-உடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு அதிக வேகம் தேவைப்படலாம். நல்ல தரமான வீடியோவை ஸ்ட்ரீமிங் செய்வதற்கு அதிகமான பிராட்பேண்டு வேகம் தேவைப்படும். 1080p அல்லது 720p தரத்தில் ஸ்ட்ரீம் செய்வதற்கு, உங்களுக்குக் குறைந்தபட்சம் 5 Mbps அலைக்கற்றை அளவு தேவைப்படும். ஆயினும், தடையற்ற 4K ஸ்ட்ரீமிங்-கிற்கு குறைந்தபட்சம் 25 Mbps அளவு வேகமே, சிறந்த வேகமெனக் கருதப்படுகிறது.

 

 

நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங்-கிற்கு தேவையான குறைந்தபட்ச வேகம் என்ன?

 

இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ்  2 மில்லியனுக்கு மேற்பட்ட சந்தாதாரர்களையும், 5 மில்லியனுக்கு மேற்பட்ட ஆக்டிவ் பயனர்களையும் கொண்டிருப்பதாக, மார்க்கெட் ரியலிஸ்ட் அறிக்கையளிக்கிறது. நம் நாட்டில் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக நெட்ஃபிளிக்ஸ் ஆகியிருக்கிறது, மேலும், இது ஸ்ட்ரீமிங் தளத்திற்கு நல்ல வருவாயும் பெற்றுத் தருகிறது.

 

 

நெட்ஃபிளிக்ஸ்-ஐ ஸ்ட்ரீம் செய்வதற்குத் தேவையான பதிவிறக்க வேகமானது, வீடியோவின் தரத்தைப் பொறுத்தே இருக்கிறது. ஸ்டான்டர்டு டெஃபனிஷன் வீடியோவை ஸ்ட்ரீம் செய்வதற்குக் குறைந்தபட்சம் 3 Mbps-உம், HD வீடியோக்களுக்குக் குறைந்தபட்சம் 5 Mbps-உம், அல்ட்ரா HD வீடியோக்களுக்கு 25 Mbps-உம் தேவைப்படும். ஒரு வீடியோ ஸ்ட்ரீம் செய்வதற்கு உண்மையில் 0.5 Mbps போதுமானதென்றும், ஆனால் 1.5 Mbps-க்கு கீழ் செல்வதால் அது தானாகவே வீடியோ தரத்தைக் குறைத்து விடுமென்றும் நெட்ஃபிளிக்ஸ் உதவி மையம் கூறுகிறது.

 

யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங்-கிற்கு குறைந்தபட்சமாக எவ்வளவு வேகம் எனக்குத் தேவைப்படும்?

 

கூகிள் கூற்றுப்படி, ஸ்டான்டர்டு டெஃபனிஷன் யூடியூப் வீடியோக்களைத் தடையின்றி ஸ்ட்ரீம் செய்வதற்கு 1 Mbps-உம், அங்கே லைவ் செல்வதற்குக் குறைந்தபட்சம் 2 Mbps-உம் தேவைப்படும். ஹை டெஃபனிஷன் காணொளிகளை ஸ்ட்ரீம் செய்வதற்கு,  குறைந்தபட்சம் 2.5 Mbps-உம், மற்றும் 1080p வீடியோக்களுக்குக் குறைந்தபட்சம் 4 Mbps-உம் தேவைப்படும். 4K அல்ட்ரா HD மோட்-இல் பல விடியோக்களை நீங்கள் கண்டுகளிக்கலாம், மேலும் நீங்கள் அல்ட்ரா HD வீடியோக்களைத் தங்கு தடையின்றி பார்ப்பதற்கு 15 Mbps வேகத்தைக் கையாள வேண்டியிருக்கும். யூடியூப் தொலைக்காட்சிக்குக் குறைந்தபட்சம் 3 Mbps வேகம் தேவைப்படும்.

 

ஆன்லைன் கேம்ஸ் லைவ் ஸ்ட்ரீமிங்-கிற்கு தேவையான இன்டர்நெட் வேகம் என்ன?

 

FCC-யின் பிராட்பேண்டு வேகக் கையேட்டின்படி, ஆன்லைன் கேமிற்கு குறைந்தபட்ச பதிவிறக்க வேகம் 1 Mbps ஆகும். ஒரு சமயத்தில் நிகழும் ஒரே ஒரு பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த வேகம் பொருந்தும். ஒரே நேரத்தில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பயனர்கள் ஆன்லைனில் இருக்கும் போது, குறைந்தபட்சமாக 6 Mbps வேகம் தேவைப்படுகிறதென FCC பரிந்துரைக்கிறது. நீங்கள் HD படங்களைப் பார்ப்பதற்கு, வீடியோ கான்ஃபரன்ஸ் மற்றும் ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கு 15 Mbps அல்லது அதற்கும் மேற்பட்ட  வேகம் பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு கேமிங் தளமும் வேறானது, எனவே லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோ கேம்ஸிற்கு குறைந்தபட்சம் 1 Mbps அப்லோடு வேகம் உங்களுக்குத் தேவைப்படும்.

 

ஃபேஸ்புக் லைவ்-விற்கு தேவையான குறைந்தபட்ச இன்டர்நெட் வேகம் எவ்வளவு?

 

ஃபேஸ்புக் லைவ் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் இந்த வருடத்தில் அபரிமிதமான வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. ஹை டெஃபனிஷன் வீடியோவை ஸ்ட்ரீம் செய்வதற்கு, பயனருக்குக் குறைந்தபட்சம் 5 Mbps தேவைப்படும். ஆயினும், பயனர் குறைந்தது 10 Mbps-ஐ பயன்படுத்துவார். ஃபேஸ்புக்-இல் லைவ் செல்வதற்கு, ஃபேஸ்புக் நிறுவனம் அளித்துள்ள பரிந்துரைகளைப் பார்க்கலாம்-

 

ஆடியோ பிட் வேகம் 96 Kbps அல்லது 128  Kbps

 

அதிகபட்ச பிட் விகிதம் 4000 Kbps 

 

1080p (1920 x 1080) ரெசொல்யூஷன்-க்கு அதிகபட்சமாக ஒரு வினாடிக்கு 60 ஃபிரேம்கள் 

 

4K லைவ் ஸ்ட்ரீம் செய்வதற்குத் தேவையானவை என்னென்ன?

 

4K வீடியோவை ஸ்ட்ரீம் செய்வதற்கு, பயனர்கள் அதிவேக இன்டர்நெட்-ஐ பயன்படுத்த வேண்டும். நெட்ஃபிளிக்ஸ்-ஐ ஸ்ட்ரீம் செய்வதற்கு, பயனர் குறைந்தபட்சம் 25 Mbps-ஐ பயன்படுத்த வேண்டும். 4K HDR வீடியோவை ஸ்ட்ரீம் செய்வதற்கு, குறைந்தபட்சம் 25 Mbps இணைப்புடன் கூடவே, பயனர் HDR மற்றும் HEVC டீகோடர்-ஐ ஆதரிக்கும் 4K UHD TV-ஐ பயன்படுத்த வேண்டியிருக்கும்.

 

 

பல்வேறு ஆன்லைன் பயன்பாடுகளை ஸ்ட்ரீம் செய்வதற்குத் தேவையான வேகம் குறித்த இந்த விவரங்கள், நீங்கள் வழங்குநரிடமிருந்து சரியான வேகத்தைப் பெறுகிறீர்களா அல்லது அதை விடச் கூடுதலானது உங்களுக்குத் தேவைப்படுமா என்பதை நீங்கள் தீர்மானிப்பதற்கு உதவும். இவை எல்லாவற்றையும் நீங்கள் கணக்கிட்டுப் பார்த்து, அடிப்படையாகத் தேவைப்படும் அளவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம். இது உங்களுடைய பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு சிறந்த இன்டர்நெட் பிளான்-ஐ நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு உதவி புரியும்.

Related blogs

323

How many devices can use prime video
3 minutes read

How many devices can use prime video

Read more

751

What is Amazon Prime Lite
3 minutes read

What is Amazon Prime Lite

Read more

110

How to rent movies on amazon prime
4 minutes read

How to rent movies on amazon prime

Read more
2
How may i help you?