BROADBAND PLANS

உங்களின் பிராட்பேண்ட் பிளானை முழுமையாக பயன்படுத்துவது எப்படி?

Friday, Dec 02, 2022 · 20 mins

739

how to make full use of your broadband plan ta blog image

இணையம் நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கைபற்றியுள்ளது. சாத்தியக்கூறுகளின் மெய்நிகர் உலகம் என்று செல்லப்பெயர் பெற்ற இணையம், இன்று அத்தியாவசியமாகிவிட்டது, 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அன்றாட தகவல்களுக்காக இணையத்தைச் சார்ந்துள்ளனர். இது மொபைல் நெட்வொர்க்குகள் மற்றும் லேன் இணைப்புகள் மூலம் கிடைத்தாலும், பிராட்பேண்ட்டின் வேகத்திற்கு ஈடாகாது. இந்த வகை இணைய தொடர்பு பல ஆண்டுகளாக நம்மைச் சுற்றி உள்ளது, ஆனால் சமீப காலமாகவே கொண்டாடப்படுகிறது.

நீங்கள் பிராட்பேண்ட் திட்டங்களை எவ்வாறு திறம்பட பயன்படுத்தலாம் என்று யோசிக்கிறீர்களா? உங்கள் சப்ஸ்க்ரிப்ஷனை எவ்வாறு முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதை அறிய, இறுதிவரை படியுங்கள்.

பிராட்பேண்ட் என்றால் என்ன?

பிராட்பேண்டைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகளின் பட்டியலுக்குச் செல்வதற்கு முன், முதலில் இந்த நெட்வொர்க் தகவல்தொடர்பு வடிவத்தைப் பற்றி அறிவோம். பிராட்பேண்ட், இந்நாட்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஊடகம் மற்றும் விரலுக்கு வீக்கம் இல்லாத விலையில் அதிவேக இணைய இணைப்பை வழங்குவதற்கு பெயர் பெற்றுள்ளது. இது உங்கள் வசம் நிலையான இணைப்பை வழங்குகிறது மற்றும் உங்கள் விரல் நுனியில் ஏராளமான தகவல்களை சேமிக்க உங்களை அனுமதிக்கிறது.

உங்கள் பிராட்பேண்ட் இணைப்பை திறம்பட பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்

  1. தகவலைப் தேடலாம், வலைத்தளங்களை உலாவலாம்

    உங்கள் கேள்விகளுக்கு பதில் பெற ஒரு நிபுணரைத் தேடிய நாட்கள் எல்லாம் மறைந்துவிட்டது. இன்று, இணையத்தில் உலாவி உங்கள் சந்தேகங்களை எளிதில் தீர்த்துக்கொள்ளலாம். இந்த தேடுபொறிகளில் நீங்கள் தேடும் அனைத்தும் உள்ளன, பயணப் விவரங்கள், சமையல் செய்முறை, ஒப்பனை தந்திரங்கள், பிரபலமான ஹேக்குகள், மருத்துவ விளக்கங்கள், படிப்பு தொடர்பான பொருட்கள், வேலை தேடல், சான்றிதழ் படிப்புகள் என்று எதுவாகவும் இருக்கலாம்.

    கூகுள் அல்லது வேறு ஏதேனும் பிரபலமான தேடுபொறியில் நீங்கள் நினைப்பதை டைப் செய்தால் போதும், கண் இமைக்கும் நேரத்தில் சரியான தகவலைப் பெறுவீர்கள். 24 மணி நேரமும் உங்களுக்கு உதவ இணையம் இருப்பதால், உங்களுக்கு விஷயங்களைக் கற்றுத் தரக்கூடிய ஒருவரை வெளியே சென்று தேட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்குத் குறிப்பிட்ட வலைத்தளத்தின் URL தெரிந்தால், உங்கள் நேரத்தையும் முயற்சியையும் குறைக்க, அதை தேடுபொறி பெட்டியில் நேரடியாக உள்ளிடலாம். இது உங்களை நேரடியாக இணையதளத்தின் குறிப்பிட்ட பக்கத்திற்கு அழைத்துச் சென்று உங்கள் எல்லா கேள்விகளையும் நொடி நேரத்தில் தீர்க்கும்.

  2. உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், இசை மற்றும் இணையத் தொடர்களை ஆன்லைனில் அனுபவியுங்கள்

    தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதை விரும்பாதவர் இந்த உலகில் யார்? மேலும் அதை சாத்தியமாக்கும் ஒரே ஊடகம், இணையம் மட்டுமே. தொலைக்காட்சியில் உங்களுக்குப் பிடித்த திரைப்படம் அல்லது நிகழ்ச்சியைப் பார்க்க வார இறுதி வரை காத்திருக்க வேண்டிய நாட்கள் முடிந்துவிட்டன. இப்போதெல்லாம், நீங்கள் மிகவும் விரும்பும் திரைப்படங்கள், ஒரே கிளிக்கின் தொலைவில் இருக்கிறது. மேலும், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வெப் சீரிஸ் வெளியாகும் OTT இயங்குதளங்களின் யுகத்தில் நாம் வாழ்கிறோம். அதிவேக பிராட்பேண்ட் மட்டுமே இதை அனுபவிக்க உதவும்.

    இணையம் உங்களுக்காக பரந்த அளவிலான சாத்தியங்களை வழங்குகிறது, மேலும் உங்கள் பொழுதுபோக்கு விருப்பங்களை பூர்த்தி செய்ய இணையதளத்தின் இலவச அல்லது கட்டண பதிப்பை ஒருவர் தேர்வு செய்யலாம். மேலும், ஒரு நல்ல இணைய இணைப்பு, வீடியோக்களை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்ய அல்லது பின்னர் பார்க்க பதிவிறக்கம் செய்ய உதவுகிறது. உங்களுக்கு பிடித்த இசை மற்றும் திரைப்படங்களை ஆன்லைனில் ரசிப்பது உங்கள் பிராட்பேண்ட் சந்தாவைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழியாகும்.

  3. பயணத்தின்போது ஃபைல்களைப் பதிவிறக்குங்கள் அல்லது பதிவேற்றுங்கள்

    படங்கள், வீடியோக்கள், இசை, PDFகள் என பலவற்றைப் பதிவிறக்குவதற்கு இணையத்தில் முடிவற்ற ஃபைல்களின் அணிவரிசை உள்ளன. இருப்பினும், நீங்கள் அவற்றை பிராட்பேண்ட் மூலம் மட்டுமே பதிவிறக்கவோ பதிவேற்றவோ செய்யலாம். பென் டிரைவ்கள் மற்றும் ஃபிளாஷ் டிஸ்க்குகள் மூலம் நீங்கள் தகவல் மற்றும் மீடியாக்களை பகிர்ந்து கொண்ட காலம் ஒன்று இருந்தது. இனி அது இல்லை! இன்று, இந்த பணிகளை கூகுள் டிரைவ் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஆன்லைனில் செய்ய முடியும். இணைய வேகத்தைப் பற்றி கவலைப்படாமல் ஆன்லைன் ஸ்டோரேஜை  பயன்படுத்துங்கள் மற்றும் பயணத்தின்போது உங்களுக்குப் பிடித்த ஃபைல்களைப் பதிவிறக்கலாம், பதிவேற்றலாம். தடையற்ற காட்சி அனுபவத்தை அனுபவிக்க சிறந்த மற்றும் அதிவேக பிராட்பேண்ட் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

  4. வீடியோ கான்பரன்சிங் மூலம் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்

    பிராட்பேண்ட் என்பது தகவல்களை சேகரிப்பதற்கோ அல்லது மின்னஞ்சல்களை அனுப்புவதற்கோ மட்டும் அல்ல, இவை முக்கியமாக உங்களை எண்ணற்ற வாய்ப்புகளின் உலகிற்கு அழைத்துச் செல்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அங்கு நீங்கள் அனைத்தையும் நிகழ்நேரத்தில் அனுபவிக்க முடியும். இணையம் பல வழிகளில் இணைப்பை அனுமதித்து மக்களிடையே உள்ள தூரத்தைக் குறைத்துள்ளது. அதில் ஒன்று வீடியோ கான்ஃபரன்சிங். உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் முடிவில்லா வீடியோ அழைப்புகளை அனுபவித்து, தூரத்தை மறந்திடுங்கள். ஜூம், ஸ்கைப், கூகுள் மீட் போன்ற பல வீடியோ கான்ஃபரன்சிங் பிளாட்ஃபார்ம்கள் உங்களை எந்த நேரத்திலும் உங்கள் அருகில் உள்ளவர்களிடம் அழைத்துச் செல்ல முடியும்.

  5. ஆன்லைன் ஷாப்பிங்கை அனுபவியுங்கள்

    நீங்கள் ஷாப்பிங் செய்வதை விரும்புகிறீர்களா, ஆனால் வெளியே செல்ல போதுமான நேரம் இல்லையா? கவலைப்பட வேண்டாம், பிராட்பேண்ட் இணைப்பின் வசதியால், இப்போது உங்கள் படுக்கையில் இருந்தே இந்த இன்பத்தை அனுபவிக்க முடியும். உங்களுக்குப் பிடித்தமான ஷாப்பிங் தளங்களை ஆன்லைனில் உலாவி, உங்களுக்குப் பிடித்தமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, ஆன்லைன் பரிவர்த்தனை செய்து, உங்கள் வீட்டு வாசலில் மகிழ்ச்சியின் டெலிவரியை பெறுங்கள்.

முடிவுரை

பிராட்பேண்ட் இப்போது நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது, அதை எப்படி சிறப்பாகப் பயன்படுத்துவது என்று வரும்போது தேர்வுகளுக்குப் பஞ்சமில்லை. உங்கள் இணைய இணைப்பை முடிந்தவரை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள் மற்றும் திறந்த கைகளுடன் வாய்ப்புகளின் மெய்நிகர் உலகத்தை அனுபவியுங்கள். தடையற்ற மற்றும் அதிவேக இணைய இணைப்பை நீங்கள் சரியாகத் தேடுகிறீர்கள் என்றால், இப்போது ACT Fibernet உடன் இணைந்திருங்கள் மற்றும் வங்கியை திருட அவசியமில்லாத விலையில் சந்தாக்களை அனுபவியுங்கள்.

  • Share

Be Part Of Our Network

Related Articles

Most Read Articles

PAY BILL

4 easy ways to pay ACT Fibernet bill online

Monday, Dec 04, 2017 · 2 Mins
1465822

WI-FI

Simple Ways to Secure Your Wi-Fi

Wednesday, May 16, 2018 · 10 mins
542136
Read something you liked?

Find the perfect internet plan for you!

Chat How may i help you?