INTERNET

இனி பஃபரிங் இல்லை_ எப்படி பஃபரிங் பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் அல்டிமேட் ஹை ஸ்பட் இன்டர்நெட் அனுபவத்தைப் பெறுவது என்பதை அறிந்துகொள்ளவும்

Thursday, Jul 07, 2022 · 25 mins

868

இனி பஃபரிங் இல்லை_ எப்படி பஃபரிங் பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் அல்டிமேட் ஹை ஸ்பட் இன்டர்நெட் அனுபவத்தைப் பெறுவது என்பதை அறிந்துகொள்ளவும்

உங்கள் அபிமான டிவி நிகழ்ச்சிக்கான சீசன் ஃபினாலே (பிரம்மாண்டமான நிகழ்ச்சி) அப்போதுதான் OTT தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை பார்த்து ரசிக்க நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உங்கள் ஸ்மார்ட் டிவி முன்பு தயாராக இருக்கிறீர்கள். ஆனால் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு, வீடியோ அப்படியே நின்று விடுவது மட்டுமின்றி, உங்கள் திரையின் நடுவில் தொடர்ந்து மிக மெதுவாக சுற்றி கொண்டேயிருக்கும் வட்டத்தை மட்டுமே காண முடியும் நிலை ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்துப்பாருங்கள். இல்லை, ஒருவேளை நீங்கள் உங்களுக்கு மிக பிடித்த விளையாட்டை விளையாண்டு கொண்டிருக்கிறீர்கள், அது வொர்ல்டு ஆஃப் வொர்ஷிப்-ன் (World of Worship) புதிய வெர்ஷன் என்று வைத்துக்கொள்வோம், மீண்டும் மோசமான இந்த வெள்ளை வட்டம் சுற்றிக்கொண்டேயிருக்கிறது, இது உங்களை எந்த விதமான தீர்வும் இல்லாத விரக்தியான சூழ்நிலைக்கு தள்ளிவிடும் அல்லவா?

அதி-வேகமான இணையம் என்று பார்க்கும் போது நாம் இதுவரை பல பிரச்சனைகளை பார்த்திருந்தாலும், நாம் அனைவரும் நமது அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலும் எதிர்க்கொள்ளக்கூடிய பிரச்சனைகளில் பஃபரிங்கும் (buffering) இருந்து வருகிறது. இந்த கட்டுரை மூலம், இவ்வாறு தொடர்ந்து நடக்கும் பிரச்சனையை முற்றிலுமாக தீர்க்க நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம் - நாம் பஃபரிங் என்றால் என்ன, ஏன் அவ்வாறு நடக்கிறது மற்றும் அதை சரி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசுவோம்.

பஃபரிங் எதனால் ஏற்படுகிறது?

பஃபரிங்கை புரிந்துக்கொள்ள, நாம் முதலில் வீடியோ ஸ்ட்ரீமிங் என்பதனைப் பற்றி புரிந்துக்கொள்ள வேண்டும். இணையத்திலிருந்து பிளேயாகும் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் சாதனங்களே பஃபர் செய்யும். இதை எளிதாக சொல்ல வேண்டுமெனில் நீங்கள் என்ன பார்த்துக்கொண்டிருக்கிறீர்களோ அதை அவை முன்பே ஸ்ட்ரீம் செய்துவிடுவதால், நீங்கள் அதை பார்க்கும் போது குறிப்பிட்ட வீடியோ தொடர்ந்து பிளே ஆகும்.

ஒருவேளை சில காரணங்களால், ஃபைல் ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டிருக்கும் போது வீடியோ ஒரு குறிப்பிட்ட இடம் வரை பிளே ஆகிவிடுகிறது, அதற்கு பிறகு உங்களால் வீடியோவை தொடர்ந்து தடையின்றி பார்க்க முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது தான் பஃபரிங் ஆரம்பிக்கிறது, மேலும் அப்போது தான் அத்தகைய வெள்ளை வட்டம், சுற்றிக்கொண்டியிருக்கும் அம்புகள் அல்லது லோடிங் என்ற செய்திகள் உங்கள் ஸ்க்ரீனில் தெரிய ஆரம்பிக்கும். இது வீடியோ ஸ்ட்ரீம் பிளேயாகும் வீடியோவை தொடர்ந்து பிளே செய்ய முனையும் போது மட்டுமே நடக்கிறது.

இப்போது, ஒருவேளை நீங்கள் ஒரு பெரிய வீடியோவை பிளே செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அதன் ஸ்ட்ரீமிங் வேகம் பார்க்கும் வேகத்தை விட சிறப்பாக இல்லாமல் இருந்தால், உங்கள் வீடியோ பல முறை பஃபர் ஆகிக் கொண்டே இருக்கும்.

பஃபரிங்கை சரி செய்வதற்கு உங்களால் செய்ய முடிவது யாவை?

பஃபரிங் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, மேலும் அவற்றில் ஒன்றோ அல்லது அவற்றில் பலவற்றோ உங்கள் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம். மிக பொதுவாக ஏற்படும் பிரச்சனை ஒன்றை பட்டியலிட்டு அதிலிருந்து இறங்கு வரிசையில் ஒவ்வொன்றாக பார்ப்போம். நீங்கள் பட்டியலை முழுவதமாக அலசி ஆராய்ந்து, ஒவ்வொரு பிரச்சனையாக பார்த்து, அது உங்கள் பிரச்சனையை சரி செய்கிறதா என்று முயன்று பார்க்கலாம்.

அதி-வேக இணையத்தைப் பெறுதல்

இது வீடியோக்கள் பஃபர் ஆவதை விரைவாக சரி செய்வதற்கான தீர்வாகும். உங்கள் இணைய வேகம் வீடியோக்களை எந்தவித பிரச்சனையுமின்றி ஸ்ட்ரீம் செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் செய்ய வேண்டிய மிக சாத்தியக்கூறு நிறைந்த விஷயம், நீங்கள் உங்கள் இணைய டேட்டா பிளானை மேம்படுத்துவது தான். ஆம், நீங்கள் அதி வேகம் அல்லது அதிக டேட்டாவை பெறலாம்.

எதனால் இது?

இது DNS சர்வரே மெதுவாக இயங்குவதால் கூட இருக்கலாம் அல்லது உங்கள் கேபிள் லைனில் சிக்கினல் மோசமாக இருப்பதால் கூட இருக்கலாம். அத்தகைய நிலையில், உங்கள் இணைய சேவை வழங்குநரை மாற்றுவதே சிறந்த யோசனையாக இருக்கும், அத்துடன் உங்கள் பகுதியில் மிக வேகமான இணையத்தை வழங்குவதற்கு பெயர் போன வழங்குநரை தேர்ந்தெடுப்பது சாலச்சிறந்தது.

வேறு விருப்பத்தேர்வு என்னவெனில், அதி வேக இணையத்தை வழங்குவதற்கெனவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பிளானை கண்டறிதல். உதாரணத்திற்கு, ACT-ஐ எடுத்துக்கொள்வோம், இதில் ஸ்பெஷல் கேமிங் பேக் இருக்கிறது, அது ஆன்-டிமாண்ட் ஸ்பீட் பூஸ்ட்ஸ் (300 MBPS வரை) மற்றும் ஆன்-டிமாண்ட் டேட்டா பூஸ்ட்ஸ் (1800 GB வரை) ஆகியவற்றுடன் வருகிறது. அப்படியெனில், குறிப்பாக உங்களுக்கு அதி-வேக இணையம் தேவைப்படும் போது, அதாவது அதிக ரெசல்யூஷன் (resolution) கொண்ட கேம்களை விளையாடும் போது அல்லது உங்கள் அபிமான நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் போது, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆன்-டிமாண்ட் ஸ்பீட் பூஸ்ட் அல்லது டேட்டா பூஸ்ட்டை ஆன் செய்துக்கொள்ளலாம்.

உங்கள் சாதனத்தில் தற்போது ஆகிக்கொண்டிருக்கும் மற்ற டவுன்லோட்கள் அல்லது இயங்கிக்கொண்டிருக்கும் புரோக்ராம்களை நிறுத்தவும்.

இது உங்கள் இணைய வேகத்தை பூஸ்ட் செய்வதர்க்கான தற்காலிக வழி. உங்கள் வீடியோ மெதுவாக ஸ்ட்ரீம் ஆவதற்கான காரணம் உங்கள் சாதனத்தில் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் வலிமையான புரோக்ராம்ஸ் அல்லது டவுன்லோடிங் அயிட்டம்ஸ். நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் எல்லா சாதனங்கள், டெஸ்க்டாப், டேப்லட்ஸ் மற்றும் மொபைல்கள் - போன்றவைகளை சோதித்து - உங்கள் இணையத்தின் பேண்ட்விட்த் முழுவதும் உங்கள் வீடியோவை நோக்கித்தான் செல்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்

வீடியோவை சிறிது நேரத்திற்கு இடைநிறுத்தம் செய்யவும்

இது நீங்கள் உங்கள் வீடியோவை தடையில்லாமல் பார்க்க அனுமதிக்கும் மற்றொரு விரைவான தீர்வு. உங்கள் வீடியோவை சிறிது நேரம் இடைநிறுத்தம் செய்து, அது கொஞ்ச நேரத்திற்கு ஸ்ட்ரீம் ஆக அனுமதிக்கவும். மீண்டும் அதை பிளே செய்யவும், இதனால் நீங்கள் மீண்டும் மோசமான பஃபரை எதிர்கொள்ளாமல், ஸ்ட்ரீமிங் வேகத்திற்கும், பார்க்கும் வேகத்திற்கும் போதிய இடைவெளி இருக்கும் என்றும் நம்புகிறோம்.

வீடியோ பார்ப்பதற்கான நேரத்தை மாற்றுதல்

இது எப்பொழுதுமே உங்கள் இணைய வேகத்தின் பிரச்சனையாகவே இருக்காது - இது நீங்கள் உபயோகிக்கும் OTT தளத்தின் (நெட்ப்ளிக்ஸ், ஜீ(zee)5, ஹாட்ஸ்டார் மேலும் பல) சர்வர் பிஸியாக இருப்பதனாலும் ஏற்படலாம். இத்தகைய தளங்களின் சர்வர்கள் பொதுவாக இரவு 8 மணி முதல் 10 மணி வரை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது (ஓவர்லோட்) என்று ஆய்வுகள் கூறுகிறது, இதன் விளைவால் நீங்கள் உங்கள் அபிமான நிகழ்ச்சியை வேறு நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்!

வேறு வைஃபை ரவுட்டரை உபயோகிக்கவும்

தவறான ரவுட்டர் கணிப்பாக உங்கள் இணைய வேகத்தையும் பாதிக்கும். ஒருவேளை உங்களுக்கு அதி-வேக இணையம் தான் ஸ்ட்ரீமிங்கிற்கு மிக பொருத்தமாக இருக்கிறது என்று தோன்றினால், டூயல்-பேண்ட் வைஃபை ரவுட்டரை உபயோகித்துப்பாருங்கள். இந்த ரவுட்டர் 5 GHz நெட்வொர்க் உடனான கூடுதல் பேண்ட்விட்த்தை வழங்குகிறது.

வைரஸ் இருக்கிறதா என்று சோதிக்கவும்

உங்கள் சாதனம் சில தவறான மற்றும் ஆபத்தான சாப்ட்வேரினால் மெதுவாகிவிட்டதா என்பதை தெரிந்துக்கொள்ள ஆண்டி-வைரஸ் அல்லது ஆண்டி மால்வேர் சாப்ட்வேரை உபயோகித்து சோதித்து பார்க்க வேண்டும். இந்த வகையான கிளீன் அப் உங்கள் இணைய வேகத்தை உடனடியாக அதிகரிக்கச் செய்யும்.

தற்காலிகமாக வயர்ட் இணைப்பிற்கு மாறவும்

வயர்லெஸ் இணைப்புகளில் சில நேரம் ஏராளமான காரணிகளால் தடை ஏற்படும் - அதாவது இவற்றில் அலைவரிசை பிரச்சனை, சிக்னல் பிரச்சனை மற்றும் வேறு ஏதேனும் இடையூறுகள் அனைத்தும் அடங்கும். அதனால் வயர்டு இணைப்பிற்கு மாற முயற்சித்து அது உங்கள் பஃபரிங் பிரச்சனையை தீர்க்கிறதா என்று பாருங்கள்.

உங்கள் இணைய இணைப்புடன் இணைந்திருக்கும் சாதனத்தின் எண்ணிக்கையை சோதிக்கவும்

ஒரே இணைய இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் பல சாதனங்கள் நெட்வொர்க் பேண்ட்விட்தை அதிக அளவில் நுகரக்கூடும், குறிப்பாக ரவுட்டரினால் அதிக டிராஃபிக் லோடை ஈடு செய்யமுடியாத பட்சத்தில் இந்த பிரச்சனை எழலாம். எனவே, நீங்கள் ஒருவேளை வீடியோவை ஸ்ட்ரீம் செய்துக்கொண்டிருக்கும் பட்சத்தில், அந்த ஒரு சாதனம் மட்டும் இணையத்தை உபயோகிக்குமாறு கட்டுப்படுத்தி முயற்சித்து பாருங்கள்.

நம்மில் பெரும்பாலோனோர் பஃபரிங்கை மிக எரிச்சல் தரும் பிரச்சனைகளில் ஒன்றாக பார்ப்பதுண்டு. ஒருவேளை நீங்கள் நெடுநாளாக பஃபரிங் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறீர்களானால், அதி வேக இணைய இணைப்பை வாங்குவதே உங்களுக்கு பிரச்சனைக்கான சிறந்த தீர்வாக இருக்கும்.

இங்கே அதற்கான எளிய வழிமுறைகள் மற்றும் குறிப்புகளை படித்து உங்கள் வைஃபை வேகத்தை அதிகரிக்கவும்.

Read tips and tricks to increase your wifi speed here

  • Share

Be Part Of Our Network

Read something you liked?

Find the perfect internet plan for you!

Chat How may i help you?