Footer Bottom Menu

அடிக்கடி ஏற்படும் பொதுவான வைஃபை பிரச்சினைகள் மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது

  • 24

  • 28 Feb 2022

  • 3 minutes

அடிக்கடி ஏற்படும் பொதுவான வைஃபை பிரச்சினைகள் மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது

ரவுட்டர் 

மிகவும் பொதுவாக எழும் வைஃபை பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்

வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது கேட்பதற்கு வேண்டுமானால் கோலாகலமாக இருக்கலாம், ஆனால் நிலையான மற்றும் தேவையான வேகத்தை வழங்கும் பிராட்பேண்ட் இணைப்பு இல்லயெனில, அது இருட்டில் மறையும் ஒரு கனவாக மாறலாம். ஒருவேளை உங்கள் வைஃபை நீங்கள் எதிர்பார்த்தபடி இயங்கவில்லையெனில், அது உங்கள் வேலையைப் பெரிதும் பாதிக்கலாம். அதாவது குறைந்த தர வீடியோ அழைப்புகள், நீண்ட நேரம் பதிவிறக்கம்  மற்றும் பிற தகவல்தொடர்பு சிக்கல்கள் போன்ற பிரச்சனைகளை  நீங்கள் எதிர்கொள்வீர்கள். எனவே, வீட்டில் தடையில்லா வயர்லெஸ் நெட்வொர்க் உருவாக்க, நீங்கள் பொதுவாக எழும் வைஃபை பிரச்சினைகள் மற்றும் அவற்றின் சிறந்த தீர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாருங்கள் அவற்றைப் பார்ப்போம் - 

1.வைஃபை இணைப்பில் தோல்வி/செயலிழப்பு

உங்கள் ரவுட்டரை இயக்கி, உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பில் சரியான SSID மற்றும் பாஸ்வர்டை உள்ளிடுங்கள். பின்னர், இந்த நெட்வொர்க்குடன் தானாகவே (ஆட்டோமெட்டிக்காக) இணையும் படியான  அமைப்புகளை மாற்றியுள்ளீர்கள். அவ்வாறு இருப்பினும் உங்களால் இணைப்பை நிறுவ முடியவில்லை. 

காரணம்: வைஃபை வரம்பினால் ஏற்படும் பிரச்சனைகள் அல்லது இணைப்பில் ஏற்படும் வேறு தடங்களும் இவ்வாறான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். சில நேரங்களில் அது சிறிய தொழில்நுட்ப சார் குறைபாடுகள் காரணமாகவும் ஏற்படலாம்.

தீர்வு: உங்கள் வைஃபை இணைப்பு செயலிழந்தால், உங்கள் சாதனத்தில் உள்ள "நெட்வொர்க்கை மறந்துவிடுதல்" விருப்பத்தைத் தேர்வுசெய்யுங்கள். மீண்டும் வைஃபை -ஐ க் கண்டறிந்து, நம்பிக்கைச்சான்றுகளை உள்ளிட்டு இணைக்க முயற்சித்துப்பாருங்கள்.

2. இணையம் திடீரென்று வேலை செய்வதை நிறுத்துகிறது

உங்கள் வைஃபை சிக்னல் நன்றாக வேலை செய்துகொண்டிருக்கிறது, ஆனால் நீங்கள் நெட்வொர்க்குடன் இணைக்கும் போது இணைய இணைப்பு வேலை செய்வதை நிறுத்திவிட்டது என்பதை நீங்கள் கவனிக்க நேர்கிறது

காரணம்: ரவுட்டரில் உள்ள இணையச் சிக்கல்கள் அவ்வாறான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது உங்கள் சாதனத்தைப் பொறுத்து, ரவுட்டரை அணைக்கவோ அல்லது இணையத்தின் LED சிவப்பு நிறமாக மாறியோ அதை உங்களுக்கு உணர்த்தலாம். உங்கள் ரவுட்டர் மாறிக்கொண்டே இருக்கும் ஐபி முகவரியில் ஒதுக்கப்படலாம். ஒருவேளை நெட்வொர்க்கில் அதிக சுமை ஏற்பட்டாலோ அல்லது சில காரணங்களால் ரவுட்டரில் செயல்திறன் குறைந்தாலோ, அது புதிய ஐபி முகவரியின் தகவல்தொடர்பை இழக்கக்கூடும், இது இணையத் தோல்விகள் ஏற்படவும்  வழிவகுக்கும்.

தீர்வு: ரவுட்டரை மீண்டும் இயக்கும் போது அதற்கென புதிதாக ஒதுக்கப்பட்ட ஐபி முகவரியைத் தேட அனுமதிக்கும். நெரிசலான நெட்வொர்க்கின்  காரணமாக இவ்வாறான சிக்கல் ஏற்பட்டால், இந்த செயல்முறை அதை  எளிதாகத் தீர்க்க உதவும்.

3. வைஃபை ட்ராப்-அவுட் பிரச்சினை 

நீங்கள் ஒரு போட்டி சார்ந்த ஆன்லைன் விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கும் போது இணைய இணைப்பை ஒரு வினாடி இழப்பது கூட உண்மையில் மிக எரிச்சலாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நெட்வொர்க்கின் செயலற்ற நிலைத்தன்மை அதிகமாக இருக்கிறதா என்பதைச் சோதிக்கவும். பல வேகச் சோதனை பயன்பாடுகள் மில்லி வினாடிகளில் செயலற்ற நிலைத்தன்மையைக் காண்பிக்கும். இணைப்பின் தாமதமான நிலையின் மதிப்பு 30 மிஸ்-களுக்கு மேல் இருந்தால், நீங்கள் வைஃபை சிக்னலில் எப்போதாவது தடையை எதிர்கொள்ள நேரிடும்.

காரணம்: நெட்வொர்க் நெரிசலினால் ஏற்படும் இணைப்பு மற்றும் தாமத பிரச்சினைகளும் டைம்அவுட்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

தீர்வு: உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு வைஃபை அனலைசர் ஆப்-ஐப் பதிவிறக்கி, உங்கள் இணைப்புக்கான சிறந்த சேனல்களை அடையாளம் காணுங்கள். பெரும்பாலான ரவுட்டர்கள் தானாகவே இணைப்புக்கான சேனலைத் தேர்வு செய்யும். ஆனால் நீங்கள் அருகாமையில் வயர்லெஸ் நெட்வொர்க்குகள் நிறைய இருக்கும் ஒரு நெரிசலான குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தால் நீங்கள் உங்கள் விருப்பம் போல சேனலைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும்  பயனடையலாம். சேனலின் அகலம் மற்றும் சேனல் எண்ணைத் தேர்ந்தெடுத்த பிறகு, மீண்டும் ஒரு வேகச் சோதனையைச் செய்து  ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா என்று சோதிக்கவும்.

4. சில சாதனங்களில் ஏற்படும் செயல்திறன் சிக்கல்கள் 

நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட சில கம்பியூட்டர்கள் சிக்கல் இல்லாமல் வேலை செய்கின்றன, ஆனால் மற்ற சாதனங்களில் ஸ்ட்ரீமிங் செய்வதென்பது சாத்தியமில்லாதது. நெட்வொர்க் நெரிசல் போன்ற பிற சிக்கல்களை நீங்கள் எதிர்கொண்டால், சிறந்த வெளிப்பாட்டிற்கான வைஃபை பயன்முறை அமைப்புகளை நீங்கள் சோதிக்கலாம்.

காரணம்: சாதாரணமாக, ரவுட்டர்கள் என்பது 802.11 அமைப்புடன் கலந்து வருவது. இதை நீங்கள் 802.11n ஆக மட்டும் மாற்றியிருந்தால், அதனால் சில சாதனங்களில் செயல்திறன் சிக்கல்களுக்கு இது வழிவகுக்கும்.

தீர்வு: வைஃபை அடாப்டர்களின் பல்வேறு தலைமுறைகளைக் கொண்ட சாதனங்களை ரவுட்டருடன் இணைப்பைத் தொடர்ந்து அனுபவிக்கக் கலப்பு-பயன்முறை அமைப்பைத் தேர்வு செய்யவும். இந்த எளிதான வைஃபை ட்ரபிள் ஷூட்டிங் குறிப்புகள் மூலம், நீங்கள் வீட்டிலிருந்து சௌகரியமாக வேலை செய்யலாம், மேலும் உங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளை எந்த தொந்தரவும் இல்லாமல் பார்த்து மகிழலாம். உங்கள் வைஃபை இணைப்பு நிலையாக இருக்கும்போது, உங்கள் பிராட்பேண்ட் திட்டத்தின் அதிகபட்ச நன்மைகளை நீங்கள் அனுபவிக்கலாம்.

Related blogs

453

How many devices can use prime video
3 minutes read

How many devices can use prime video

Read more

916

What is Amazon Prime Lite
3 minutes read

What is Amazon Prime Lite

Read more

145

How to rent movies on amazon prime
4 minutes read

How to rent movies on amazon prime

Read more
2
How may i help you?