LEASED LINE

லீஸ்டு இன்டர்நெட்டின் சிறப்பு அம்சங்கள் என்ன.

Monday, Feb 28, 2022 · 20 mins

3901

லீஸ்டு லைன் இன்டர்நெட் இணைப்பு என்றால் என்ன?

லீஸ்  இன்டர்நெட் - இது பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

இன்றைய தேதியில் பெரும்பான்மையான தொழில்கள் இன்டர்நெட்-ஐ சார்ந்திருக்கின்றன. வலிமையான இன்டர்நெட் இணைப்பின் மூலமாக, SME-க்கள் தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதென்பதைக் காட்டிலும், அவற்றை முழுமையாக ஆராய்ந்து பார்க்கத் தொடங்கியிருக்கின்றன. பாதுகாப்பான மற்றும் வலிமையான இன்டர்நெட் இணைப்பு பற்றிப் பேசும் போது, லீஸ்டு இன்டர்நெட் பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.


லீஸ் லைன் இணைப்பு என்பதன் பொருள் என்ன?

லீஸ்  லைன் என்பது, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தளங்களை ஒன்றோடொன்று எளிதாக இணைக்கின்ற ஒரு பிரத்யேகமான தொடர்பு அலைவரிசையைக் குறிக்கிறது. உண்மையில், இது வழங்குநர் மற்றும் வாடிக்கையாளருக்கு இடையிலான ஒரு சேவை ஒப்பந்தமாகும். இந்த பிரத்யேகமான லைன் ஒரு புள்ளியிலிருந்து வேறொரு புள்ளிக்குத் தொடர்ச்சியான தரவுப் பாய்வினை(டேட்டா ப்ளோ) உறுதி செய்கிறது. இதற்கு ஒரு குறிப்பிட்ட மாதாந்திர தொகை நிர்ணயிக்கப்படுகிறது. தரவு, இன்டர்நெட், மற்றும் தொலைபேசி சேவைகளுக்கு லீஸ் லைன் பயன்பாடு என்பது மிகவும் பிரபலமான ஒன்றாகும். லீஸ் லைன் இணைப்பு, உயர்தர அலைக்கற்றை மற்றும் வேகத்தை வழங்குவதற்கு ஃபைபர் ஆப்டிக் கேபிளை சார்ந்திருக்கிறது.


பொதுவாக, லீஸ் லைன் கீழ்க்கண்டவற்றுக்குப் பயன்படுகிறது-

  • தொலைபேசி அழைப்புகளைக் கொண்டு செல்கிறது 

  • வெவ்வேறு அலுவலகங்களிலிருக்கும் சர்வர்கள் மற்றும் PC-க்களை இணைக்கிறது

  • இன்டர்நெட் இணைப்பிற்கு உதவுகிறது

  • வீட்டிலிருந்தபடியே ஊழியர்கள் தங்கள் PC-க்களை இயக்கி பணிபுரிய உதவுகிறது


ஃபைபர் லீஸ் லைன் என்றால் என்ன? இதன் நன்மைகள் என்னென்ன?

ீஸ் லைன் என்பது ஃபைபர் லீஸ்டு லைன் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஒரு பிரத்யேகமான ஃபைபர்-ஆப்டிக் சேவையாகும், மேலும் இது இணைய இணைப்பு வழங்கப்படும் வளாகத்திற்கே நேரடியாக இணைக்கப்படுகிறது. லீஸ் லைன் என்பது, பிரத்யேகமான ஃபைபர் ஆப்டிக் கேபிளின் மூலமாக பொது இன்டர்நெட்-இல் நேரடியாக இணைக்கப்படக்கூடியது. இங்கே நீங்கள் உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர வேண்டிய அவசியமில்லை. ஃபைபர் லீஸ் லைன் என்பது உங்களுக்குச் சேவை செய்வதற்காக மட்டுமே உள்ளதே தவிர, வேறு எந்த தனி நபருடனோ அல்லது பயனருடனோ பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. இந்த லீஸ் லைனின் வேகம் 2 Mbps-இலிருந்து 10 Gbps வரை இருந்திடலாம்.


ஃபைபர் லீஸ் லைன்-இன் நன்மைகள்-

  • விரைவான இணைப்பு வேகம்

  • கிளவுட் கம்பியூட்டிங்-ஐ எளிதாக அணுகுதல்

  • வலுவான சிக்னல் கிடைப்பது

  • குறைவான லேடன்சி

  • சீரான வேகம்

  • அதிக பாதுகாப்பு

  • குறைந்த செலவு 

  • HD காணொளி ஒளிபரப்பும் திறன்


பிரத்யேகமான லைன், லீஸ் லைன், பிராட்பேண்டு, ஈத்தர்நெட், ADSL, MPLS மற்றும் VPN ஆகியவற்றின் வேறுபாடு என்ன?

லீஸ் லைன்கள் பொதுவாகவே சடப்பொருட்களாகும். VPN-கள் இணைப்பினை பல்வேறு நெட்வொர்க் அடுக்குகளின் மூலம் கொடுக்க முடியும். MPLS என்பது உண்மையில், ஒரு நெட்வொர்க் ட்ராஃபிக் ரூட்டிங் அமைப்பாகும். மேலும், இது VPN சேவைகளை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.


லீஸ் லைன் இணைப்பு  மிகவும் விலையுயர்ந்தது. செலவை ஒப்பீட்டுப் பார்க்கும் போது, VPN-கள் செலவுப் பயன் திறன் மிக்கவை. மேலும், VPN பல்வேறு தேர்வுகளைக் கொண்டுள்ளது. ஆயினும், IP-அடிப்படையிலான ரூட்டிங்-ஐ விடவும் MPLS அதிக செயல்திறனை உறுதிப்படுத்துகிறது.


லீஸ் லைன்கள் உண்மையாகவும், உறுதியாகவும் பாதுகாப்பானவை. VPN-கள் குறைந்த அளவு பாதுகாப்பு உடையனவாகும். MPLS நடுத்தர அளவு பாதுகாப்பைத் தருகிறது, ஏனெனில் இதில் உள்ளார்ந்த

மறைக்குறியீடக்கம்(என்கிரிப்ஷன்) இல்லை. 


லீஸ் லைன் நிலையான அலைக்கற்றையையும், வியக்கத்தக்க வகையிலான அதிவிரைவு ‘‘பதிவேற்ற மற்றும் பதிவிறக்க’ வேகத்தை வழங்குகிறது. இது அநேகமாக மற்ற பயனர்களுடன் இணைக்கப்படுவதில்லை. பிராட்பேண்டு என்பது பிரத்யேகமான இணைப்பல்ல. மேலும், பிராட்பேண்டு மாறுபடுகிற அலைக்கற்றையைக் கொண்டுள்ளது, மற்றும் மற்ற பயனர்களுடன் இணைக்கப்படும் வாய்ப்புள்ளது. 

 

லீஸ் லைன் எவ்வாறு செயல்படுகிறது, மற்றும் அது எதற்காக தேவைப்படுகிறது?

 

ஃபைபர் ஆப்டிக் லீஸ் லைன் என்பது ஒளித் தெறிப்புகளை அனுப்புவதன் மூலம் செயல்படுகிறது. கடத்தப்பட்ட தரவானது, ஒளியின் வேகத்தில் செல்கிறது. லீஸ் லைன் இணைப்பு என்பது, உண்மையில் சேவை வழங்குநருக்கும், பயனருக்கும் இடையிலான ஒப்பந்தமாகும். சேவை வழங்குநர் சமச்சீரான அல்லது இருதிசைப்பட்ட தொலைத்தொடர்பு லைனை, இரண்டு அல்லது அதற்குக் கூடுதலாக இணைக்கக்கூடிய இடங்களுக்கு வருடாந்திர, காலாண்டு அல்லது மாதாந்திர வாடகைத் தொகைக்கு வழங்குவார்.


வணிக பயன்பாடுகள் மற்றும் பிற நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு ஒரே மாதிரியான, வலுவான இன்டர்நெட் வேகம் தேவைப்படும் வணிகங்கள், லீஸ் இணைப்பைப் பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்.


சில வணிகங்கள், தரவுகளை வழங்குவதற்கும், அலுவலக பயன்பாடுகளை அணுகுவதற்கும் தொலைவில் அல்லது வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் ஊழியர்களைச் சார்ந்திருக்கின்றன. அவர்கள் இந்த இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.


எத்தனை வகையான லீஸ் லைன்கள் உள்ளன?

சைட்-டூ-சைட் டேட்டா கனெக்டிவிட்டி மற்றும் சைட்-டூ-நெட்வொர்க் கனெக்டிவிட்டி- ஆகிய இவை இரண்டு தான் தற்போது கிடைக்கப்பெறும் நம்பகமான மற்றும் பிரபலமான லீஸ் லைன்களாகும்.


எது சிறந்தது- பிராட்பேண்டு அல்லது லீஸ் லைன்?

இது தேவை மற்றும் பட்ஜெட்டை சார்ந்தது. உங்களுக்கு அதிக பாதுகாப்புத் தன்மையுடன் கூடிய அதிவேக இணைப்பு வேண்டுமானால், மற்றும் அந்த இணைப்பினை நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லையெனில், லீஸ் லைனை தேர்ந்தெடுப்பதே உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். பல பெருநிறுவனங்கள், தங்களுடைய வேலை நடைமுறையையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கு லீஸ் லைன் இணைப்பையே பயன்படுத்துகின்றனர். மாறாக, பிராட்பேண்டு பிரத்யேகமான இணைப்பல்ல. இது மாறுபடுகிற அலைக்கற்றையைக் கொண்டது மற்றும் சமச்சீரற்றது, அதாவது, இது பதிவேற்றங்களின் போது வழங்கும் வேகத்தை விடவும், பதிவிறக்கங்களுக்கு அதிக வேகத்தைத் தருகிறது. மேலும், நீங்கள் மற்றவர்களுடன் இணைப்பினை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். பட்ஜெட்டை பற்றி நீங்கள் கவலைப்படவில்லையெனில், நீங்கள் லீஸ்டு லைனை தேர்ந்தெடுக்கலாம்.



சந்தையில் கிடைக்கப்பெறும் இன்டர்நெட் இணைப்பினை தேர்ந்தெடுக்கும் முன்னர், அடிப்படையான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வது முக்கியமாகும். இந்த வலைப்பதிவில், அனைத்து அடிப்படையான சந்தேகங்களும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. லீஸ் லைன்கள், பிராட்பேண்டு, VPN-கள் மற்றும் பல்வேறு தேர்வுகளும் கிடைக்கப்பெறுகின்றன. ஆயினும், உங்களுக்கு ஏற்ற இணைய இணைப்பு எது என்பதை நீங்கள் அறிந்துகொள்வதற்கு, சிறிய அளவிலான ஆராய்ச்சியை நீங்கள் செய்வது அவசியமாகும்.

  • Share

Be Part Of Our Network

Read something you liked?

Find the perfect internet plan for you!

Chat How may i help you?