பிராட்பேண்ட் மற்றும் வைஃபைக்கு இடையிலான வேறுபாடு என்ன?
-
119
-
16 Dec 2021
-
2 minutes

பிராட்பேண்ட் மற்றும் வை-ஃபை ஆகிய இரண்டு சொற்களும் பெரும்பாலும் ஒன்றுக்கு ஒன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இவை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள், மேலும் இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் இணையத்தைப் பற்றிய அடிப்படை விவரங்களைச் சரியாக அறிந்துகொள்ளலாம்.
எளிமையாகச் சொல்வதானால், வைஃபை என்பது ரேடியோ அதிர்வெண்கள்(ரேடியோ ப்ரீக்வென்சி) மற்றும் சிக்னல்களைப் பயன்படுத்தி கம்பிகள் இல்லாமல் தரவை அனுப்புகிறது. பிராட்பேண்ட் என்பது அதிவிரைவான இணையத்தைப் பயன்படுத்தித் தரவை(டேட்டா) அனுப்புவதாகும்.
பிராட்பேண்ட் இணைப்பு என்றால் என்ன?
பிராட்பேண்ட் என்பது பரந்த அலைவரிசையில் நடக்கும் தரவு பரிமாற்றத்தைக் குறிக்கிறது. இணையம் என்பதை இரண்டு சாதனங்களுக்கு இடையில் அனுப்பப்படும் தரவாக எண்ணிப் பாருங்கள். பிராட்பேண்ட், இந்த பட்சத்தில், அந்த தரவு நகரும் ஒரு வழியாகச் செயல்படுகிறது. பல்வேறு வகையான பிராட்பேண்ட் இணைப்புகள் உள்ளன. அவை ASL, DSL, கேபிள், ஃபைபர், போன்றவையாகும். இந்த அனைத்து தொழில்நுட்பங்களும் தங்கள் பயனர்களுக்கு அதிவிரைவான இணையத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் எனும் மிகச்சிறந்த தொழில்நுட்பம் அதன் பயனருக்குச் சமச்சீர் வேகம் மற்றும் உயர் அலைவரிசையை வழங்குகிறது என்றால் மிகையாகாது.
பிராட்பேண்ட் இணைப்பு எவ்வாறு இயங்குகிறது?
பழைய டயல்-அப் இணைப்புகள் பயன்படுத்தும் ஒற்றை வரிசையைக் காட்டிலும் அதிக தரவுகளை அனுப்பப் பல வரிசைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பிராட்பேண்ட் நமக்கு இணையத்தை வழங்குகிறது. இங்கே பிராட்பேண்ட் என்ற சொல் தரவை மாற்ற ஒன்றுக்கு மேற்பட்ட அதிர்வெண் பட்டையைப் பயன்படுத்துவதாகும்.
எளிய வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நீங்கள் ஒரு வழி மட்டுமே உள்ள தெருவாக ஒரு டயல்-அப்-ஐ எடுத்துக் கொள்ளலாம், அங்கு ஒரு நேரத்தில் ஒரே ஒரு வாகனத்தால் மட்டுமே பயணிக்க முடியும். அதே நேரத்தில் பிராட்பேண்ட் என்பது பல்வேறு பாதைகள் கொண்ட நெடுஞ்சாலை போன்றது, அங்குப் பல வாகனங்கள் எந்த இடையூறுமின்றி ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். இங்கே, ஒவ்வொரு வாகனமும் உங்களுக்கு அனுப்பப்படும் அல்லது அதற்கு மாறாக உங்களிடமிருந்து அனுப்பப்படும் தரவு பாக்கெட்-ஐக் குறிக்கிறது.
ஒரு நேரத்தில் பல தரவு பாக்கெட்டுகளின் பரிமாற்றம் இணையாக நடைபெறுவதால், பிராட்பேண்ட் வழியாக இணையத்தின் வேகம் அதிகரிக்கிறது.
வை-ஃபை என்றால் என்ன?
##BlogVASBanner##
வைஃபை தொழில்நுட்பம் என்பது அடிப்படையில் ரேடியோ அதிர்வெண்கள் மற்றும் சிக்னல்களைப் பயன்படுத்தி இரண்டு சாதனங்களுக்கு இடையில் கம்பிகள் இல்லாமல் (வயர்லெஸ்) தகவலைப் பெறுவது மற்றும் அனுப்புவதாகும். கம்பிகள் இல்லாமல் (வயர்லெஸ்) பிராட்பேண்ட்டை அணுக முடியும் வழிமுறையாக வைஃபை புரிந்து கொள்ளலாம். அனைத்து வைஃபை இணைப்பு களும் பின்வரும் இரண்டு அதிர்வெண் பட்டைகள் மூலம் பரிமாற்றங்களைச் செய்கின்றன - 2.4Ghz மற்றும் 5Ghz. 2.4Ghz அதிர்வெண் பட்டைகள் நீண்ட தூரங்களுக்கும் குறைந்த அலைவரிசைக்கும் பயன்படுத்தப்படுகிறது, அதேசமயம் 5Ghz அதிர்வெண் பட்டைகள் குறுகிய தூரத்துக்கும் பெரிய அலைவரிசைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
வை-ஃபை இணைப்பு எவ்வாறு இயங்குகிறது?
அனைத்து வைஃபை இணைப்புகளும் இரண்டு அதிர்வெண் பட்டைகளில் வேலை செய்கின்றன - அதாவது 2.4Ghz மற்றும் 5Ghz எனும் இரண்டு எளிய படிகளில் - தரவு அனுப்புதல் மற்றும் தரவைப் பெறுதல். முதலில், நீங்கள் தேடும் தகவலைப் பெறுவதற்காக, இணையத்தை அணுக உங்கள் திசைவி(ரௌட்டர்) மற்றும் மோடத்திற்கு ஒரு கோரிக்கை அனுப்பப்படும். பின்னர், அதற்கான தேடல் முடிவு, மோடம் வழியாக திசைவிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது இதற்குப் பிறகு, திசைவி தகவலைக் கம்பியில்லா முறையில் (வயர்லெஸ்) சாதனத்திற்கு மீண்டும் அனுப்புகிறது.
வை-ஃபை மற்றும் பிராட்பேண்ட் -க்கு இடையிலான வேறுபாடு என்ன?
பிராட்பேண்ட் என்பது உங்கள் இணையச் சேவை வழங்குநரால் வழங்கப்படும் ஒரு வகை இணைய இணைப்பு. வைஃபை என்பது ஒரு தொழில்நுட்பம் என்பது மட்டுமின்றி, உங்கள் இணையத்தை அணுக பிராட்பேண்டுடன் இணைக்கப் பயன்படுத்தப்படும் வழிகளில் ஒன்றாகும். உங்கள் பிராட்பேண்ட்டை, உங்கள் திசைவி மற்றும் சாதனத்தை இணைக்கும் ஒரு லான் கேபிள் வழியாக நேரடியாக அணுகமுடியும். இருப்பினும், வைஃபை இணைப்பின் சிறப்பியல்பு என்னவெனில் இரண்டு சாதனங்களுக்கு இடையே எந்த ஒரு ஸ்தூலமான இணைப்புமின்றி தகவலை அணுகும் திறன் ஆகும்.
நீங்கள் உங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்கு அதிவிரைவு இணைய இணைப்பைத் தேடுபவரா? இதோ உங்களுக்கான ACT ஃபைபர்நெட்டின் இணையத் திட்டங்கள் இங்கே.