BROADBAND

சேவை Wifi vs நிர்வகிக்கப்பட்ட Wifi

Wednesday, Apr 26, 2023 · 50 mins

934

வைஃபை ஒரு சேவையாக மற்றும் நிர்வகிக்கப்படும் வைஃபை

தற்போதுள்ள கால கட்டத்தில் நம்பகமான வயர்லெஸ் நெட்வொர்க் இன்றி எந்த ஒரு நிறுவனமும் இயங்குவது சிரமம் தான். சொல்லப் போனால், மொபைல் மற்றும் பிற இணைய வசதி உடனான சாதனங்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக வணிக வைஃபை என்பது எந்தவொரு நிறுவனத்திற்கும் இன்றியமையாததாக மாறிவிட்டது. இது நிறுவனங்களை போட்டித்தன்மையுடன் செயல்படவும், தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவுகிறது. 

இருப்பினும், வணிகங்கள் தங்கள் வயர்லெஸ் நெட்வொர்க் உள்கட்டமைப்பை அமைக்க முற்படும் போது, அவர்கள் பொதுவாக ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொள்கின்றனர் - அது சர்வீஸ் வைஃபை (வைஃபை அஸ் ஏ சர்வீஸ் - Waas), மேனேஜ்ட் வைஃபை என இவ்விரண்டில் எதனைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது தான். இரண்டிற்கும் நன்மை தீமைகள் உள்ளன. அதாவது உங்கள் வணிகத்திற்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுப்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.

பொதுவாக சரியான தகவல் மற்றும் வழிகாட்டுதல் இல்லாத காரணத்தினால், வணிகங்கள் பெரும்பாலும் இது குறித்து தவறான முடிவுகளை எடுக்கின்றன. இத்தகைய முடிவுகள் அந்த வணிகத்தின் வளர்ச்சியையும் உற்பத்தித்திறனையும் பாதிக்கலாம். உதாரணமாக, சர்வீஸ் வைஃபை என்பது குறைந்த செலவின் அடிப்படையில் உங்களுக்குக் கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம், ஆனால், அது உங்கள் வணிகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இல்லாத பட்சத்தில், அதில் நீங்கள் முதலீடு செய்தால், அந்தப் பணம் கண்டிப்பாக வீணாகிவிடும்.

எனவே, வணிகங்கள் தங்களுக்கு எந்த  வைஃபை சிறந்தது என்பதைத் தீர்மானிக்க உதவும் வகையில், இந்தப் பதிவு சர்வீஸ் வைஃபை மற்றும் மேனேஜ்ட் வைஃபை ஆகிய இரண்டினைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவற்றின் அம்சங்கள், நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்வதன் மூலம், வணிக உரிமையாளர்கள் தங்களின் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த வயர்லெஸ் தொழில்நுட்பத்தை தேர்வு செய்யது பயனடையலாம்.

மேனேஜ்ட் வைஃபை என்றால் என்ன?

மேனேஜ்ட் வைஃபை என்பது வைஃபை நெட்வொர்க்கை வடிவமைத்தல், பெறுதல், நிறுவுதல், பராமரித்தல், கண்காணித்தல் அல்லது மேம்படுத்துதல் ஆகியவற்றை மூன்றாம் தரப்பு விற்பனையாளருக்கு அவுட்சோர்ஸ் செய்ய ஒரு நிறுவனத்தை அனுமதிக்கக் கூடிய ஒரு பிசினஸ் சொல்யூஷன் ஆகும். நெட்வொர்க் சரியாக நிர்வகிக்கப்படுவதையும், பாதுகாப்பாக இருப்பதையும், எப்போதும் சிறந்த முறையில் இயங்குவதையும் இது உறுதி செய்கிறது.

மேனேஜ்ட் வைஃபை சேவைகள் பரந்த அளவிலான தீர்வுகளை வழங்குகின்றன. இதன் சேவைகளானது  கணக்கெடுப்புகள் மற்றும் நெட்வொர்க் வடிவமைப்பு முதல் தேவையான உபகரணங்களைப் பெறுவது வரை பரந்த அளவில் செயல்படுகிறது. உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க்கை நிர்வகித்தல், கவனித்தல், பிரச்சனைகளைச் சரிசெய்தல் மற்றும் சேவையைத் தொடர்ந்து மேம்படுத்துதல் ஆகியவையும் இதில் அடங்கும்.

மேனேஜ்ட் வைஃபை என்பது அதிக பணம் உங்கள் கையை மீறி செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லாத அல்லது தொழில்நுட்பத் துறைக்கு தொடர்ந்து சொந்தரவு கொடுக்க விரும்பாத வகையில் தங்கள் வைஃபை செயல்திறனை அதிகரிக்க விரும்பும் வணிகங்களுக்கு ஒரு சரியான தீர்வாக அமையும். மேலும், நெட்வொர்க்கை அவ்வப்போது  கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டிய தொந்தரவும் இதில் இருக்காது, அதனால் உங்கள் பணியாளர்கள் மற்ற முக்கியப் பணிகளில் கவனம் செலுத்தி செயல்திறனை மேம்படுத்தலாம்!

மேனேஜ்ட் வைஃபையின் நன்மைகள்

மேனேஜ்ட் வைஃபை வயர்லெஸ் நெட்வொர்க் பல முக்கிய நன்மைகளை வழங்குவதால் இது பல நிறுவனங்களுக்கு ஒரு பிடித்தமானத் தேர்வாக அமைகிறது. இவற்றில் பின்வருவன அடங்கும்:

குறைந்த செலவில் நிறைவான சேவை

மேனேஜ்ட் வைஃபை வயர்லெஸ் நெட்வொர்க் ஆனது தேவையான உபகரணங்களை வாங்குதல் மற்றும் பராமரிப்பது தொடர்பான செலவுகளைச் சேமிக்கவும், நெட்வொர்க் சீராக இயங்குவதை உறுதி செய்யவும் வணிகங்களுக்கு உதவுகிறது.

சிக்கல்கள் எதுவுமற்றது

மேனேஜ்ட் வைஃபை ஆனது நெட்வொர்க்கை நிறுவுதல், கட்டமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற முக்கிய பொறுப்புகளை அனுபவமிக்க மூன்றாம் தரப்பு விற்பனையாளரின் பொறுப்பாக்கிவிடுகிறது. இதன் காரணமாக, தொழில் நுட்ப அம்சங்களைப் பற்றி வணிகர்கள் எந்த கவலையும் கொள்ளத் தேவை இல்லை. அதற்கு பதிலாக மற்ற முக்கியமான பணிகளில் கவனம் செலுத்தலாம்.

பாதுகாப்பு

மேனேஜ்ட் வைஃபை நெட்வொர்க் ஆனது வணிகங்களுக்கு அவற்றின் தரவை அத்துமீறி ஊடுருபவர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில் அங்கீகாரம் மற்றும் குறியாக்கம் போன்ற சக்தி வாய்ந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. விலை உயர்ந்த தரவு அத்துமீறல்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிற அசம்பாவிதங்களைத் தவிர்க்க இது வணிகங்களுக்கு உதவும். 

நம்பகத்தன்மை

மேனேஜ்ட் வைஃபை நெட்வொர்க்கின் உதவி கொண்டு வணிகங்கள் தங்கள் வயர்லெஸ் நெட்வொர்க் ஆனது பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். வைஃபை நெட்வொர்க் எப்பொழுதும் சரியாக இயங்குவதையும், எந்த ஒரு சிக்கலையும் விரைவாகத் தீர்க்க இயலும் என்பதையும் உறுதி செய்வதற்கு விற்பனையாளர் பொறுப்பேற்கிறார்.

மேம்பட்ட செயல்திறன்

மேனேஜ்ட் வைஃபை ஆனது உங்கள் நெட்வொர்க் எப்போதும் சரியாக இயங்குவதை உறுதி செய்கிறது. அதாவது, வேகம் குறைந்து விடாமல் அதிக பயனர்களையும் டேட்டாவையும் திறம்பட கையாள வல்லது.  

அறிக்கையிடல் மற்றும் பகுப்பாய்வு

மேனேஜ்ட் வயர்லெஸ் நெட்வொர்க் ஆனது விரிவான அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அணுகலை வழங்குகிறது. இத்தகைய அறிக்கைகள் வணிகங்கள் தங்கள் நெட்வொர்க் செயல்திறனைப் பற்றி சிறந்த முடிவுகளை எடுக்க உதவுகின்றன. உதாரணமாக, வணிகங்கள் தங்கள் வைஃபை நெட்வொர்க்கின் எந்தப் பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது அல்லது எந்த நேரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்க முடியும். இது, தேவையான மாற்றங்களைச் செய்து, தங்களின் வயர்லெஸ் நெட்வொர்க் செயல்திறனை மேம்படுத்த வணிகங்களை அனுமதிக்கிறது.

ACT வழங்கும் நன்மைகள்

ACT சேவையானது வணிகங்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் மேனேஜ்ட் வைஃபை சேவைகளை வழங்குகிறது. அதே நேரத்தில் இது பிசினஸ் வைஃபை செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. ACT-ன் நிபுணர்கள் குழுவால் வணிகங்களின் குறிப்பிட்டத் தேவைகளுக்கு ஏற்ப முழுமையான வைஃபை பிசினஸ் சேவையை வழங்க முடியும். ACT-ன் மேனேஜ்ட் வைஃபை சேவைகளைத் தேர்ந்தெடுப்பதால் பெறக்கூடிய சில முக்கிய நன்மைகள் பின்வருமாறு:

  • ஒவ்வொரு பயனருக்கும் சிறந்த மற்றும் உறுதியளிக்கப்பட்ட வேகம் கிடைக்கும்.

  • செயல்திறனுக்கான மதிப்பு.

  • பல தரப்பட்ட அறிக்கைகள் மற்றும் பயனர் தகவல் சேகரிக்கப்பட்டு, அவை எதிர்கால பயன்பாட்டிற்கு கிடைக்கும் வகையில் அமைக்கின்றன.

  • தனிப்பயனாக்கப்பட்ட கேப்டிவ் போர்டல்.

  • பல தரப்பட்ட வேகங்கள், நேர வரம்பின் அடிப்படையிலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை உருவாக்குவதற்கான முழுமையான ஸ்டேக்.

மேனேஜ்ட் வைஃபை-ன் குறைகள்

மேனேஜ்ட் வைஃபை பல நன்மைகளை வழங்கினாலும், இது குறித்து நாம் கருத்தில் கொள்ளக்கூடிய சில முக்கிய குறைபாடுகளும் உள்ளன. குறைபாடுகளை அறிந்து வைத்துக் கொள்வது வணிகங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த வைஃபை சேவையைத் தீர்மானிக்க உதவுகிறது. அவற்றில் பின்வருவன அடங்கும்:

கட்டுப்பாடு இல்லாது இருத்தல்

வணிகங்கள் தங்கள் வைஃபை நெட்வொர்க் உள்கட்டமைப்பின் நிர்வாகத்தை ஒரு மூன்றாம் தரப்பு விற்பனையாளரிடம் அவுட்சோர்ஸ் செய்யும் போது, வணிகங்களுக்கு தங்கள் நெட்வொர்க் மீது நேரடி கட்டுபாடு இருக்காது. அதாவது ஏதேனும் மேம்படுத்தல்களை ஒழுங்கமைத்து செயல்படுத்த வேண்டுமெனில் மூன்றாம் தரப்பு விற்பனையாளர் தான் அதனை செய்ய இயலும்.

மூன்றாம் தரப்பு விற்பனையாளரை சார்ந்து இருத்தல்

வணிகங்கள் தங்கள் வைஃபை நெட்வொர்க் உள்கட்டமைப்பின் பராமரிப்பு மற்றும் ஆதரவிற்காக மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களைச் சார்ந்திருக்க வேண்டி இருக்கும். இது குறித்து ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால், விற்பனையாளர் சரியான முறையில் பதிலளிக்கும் படி வணிகங்கள் உறுதி செய்ய வேண்டும். 

சாத்தியமான விற்பனையாளர் ஒப்பந்தக் கட்டுப்பாடு

பல வயர்லெஸ் நெட்வொர்க் விற்பனையாளர்கள் நீண்ட கால ஒப்பந்தம் போட்டுக் கொண்டு தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள். இது பொதுவாக அரை ஆண்டு அல்லது ஒரு ஆண்டாக இருக்கும். இதை நாம் ஏதேனும் காரணத்தினால் முடித்துக் கொள்ள விரும்பினால், அது சற்று சவாலாக இருக்கலாம். அதாவது, வணிகங்கள் தொடக்கத்திலிருந்தே சரியான ஒரு வைஃபை விற்பனையாளரையும் தீர்வையும் தேர்வு செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும்.

கட்டுப்பாடுகள்

சில சந்தர்ப்பங்களில், வைஃபை நெட்வொர்க்குகள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன அல்லது பயன்படுத்தப்படுகின்றன என்பதில் வைஃபை வழங்குநர் ஏதேனும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். எடுத்துக்காட்டாக, விற்பனையாளர் வணிகங்களை தங்கள் நெட்வொர்க்கை எந்த வகையிலும் மாற்றவோ அல்லது தனிப்பயனாக்கவோ அனுமதிக்காமல் இருக்கலாம். இது போன்ற கட்டுப்பாடுகளை தெளிவாக புரிந்து கொண்ட பின்னரே ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும்.

WaaS என்ற சர்வீஸ் வைஃபை என்றால் என்ன?

மேனேஜ்ட் வைஃபையை விரும்பாதவர்கள் தேர்வு செய்யும் மற்றொரு வைஃபை தீர்வு தான் சர்வீஸ் வைஃபை (WaaS). இது வணிகங்களே தங்கள் வைஃபை நெட்வொர்க்கின் கட்டுப்பாட்டை கொண்டிருக்கவும், தங்கள் நெட்வொர்க்குகளை தாங்களாகவே நிர்வகிக்கவும் அனுமதிக்கும் சந்தா அடிப்படையிலான வைஃபை நெட்வொர்க் தீர்வாகும்.

இது மூன்று அத்தியாவசிய கூறுகளை ஒருங்கிணைக்கிறது:

  • மென்பொருள்

இதில் வைஃபை நெட்வொர்க் மேலாண்மை மென்பொருள் மற்றும் வைஃபை அணுகல் புள்ளிகள் அடங்கும். ஒரு டேஷ்போர்டிலிருந்து வைஃபை நெட்வொர்க்குகளை சரிவர நிர்வகிக்கவும், அணுகல் புள்ளிகளை அமைத்துக் கொள்ளவும் நெட்வொர்க் செயல்திறனை கண்காணிக்கவும் வைஃபை நெட்வொர்க் மேலாண்மை மென்பொருள் ஆனது பயனர்களை அனுமதிக்கிறது.

  • கட்டமைப்பு

அணுகல் புள்ளிகள், ரூட்டர்கள் மற்றும் இது போன்ற பிற வன்பொருள் கூறுகள் என வைஃபை பிசினஸ் நெட்வொர்க்குகளின் நிறுவல் மற்றும் செயல்பாட்டிற்குத் தேவையான அனைத்து வன்பொருள்களும் இதில் அடங்கும்.

  • நிர்வகிக்கப்பட்ட சேவைகள்

நிர்வகிக்கப்படும் சேவைகள் அல்லது வெறுமனே சேவைகள் என்பது வைஃபை நெட்வொர்க் மேலாண்மை சேவைகளைக் குறிக்கிறது. WaaS வழங்குநர்கள் தான் பொதுவாக வைஃபை நெட்வொர்க் கண்காணிப்பு மற்றும் ஆதரவு, அணுகல் புள்ளி உள்ளமைவு மற்றும் மேம்படுத்தல், நெட்வொர்க் பாதுகாப்பு, வைஃபை பகுப்பாய்வு, பில்லிங் மற்றும் சார்ஜிங் மற்றும் கேப்டிவ் போர்ட்டல்கள் போன்ற வைஃபை மார்க்கெட்டிங் சேவைகளை வழங்குகிறார்கள்.

இதில் வணிகங்கள் தங்கள் வைஃபை நெட்வொர்க் நிர்வாகத்தை மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யத் தேவையில்லை. அதோடு வணிகங்கள் சொந்தமாகவே தங்கள் வைஃபை நெட்வொர்க்குகளை நிர்வகிக்கவும், சிறந்த வைஃபை நெட்வொர்க் செயல்திறனைப் பெறவும் இது உதவுகிறது.

WaaS-ன் நன்மைகள் 

மேனேஜ்ட் வைஃபையைப் போன்றே WaaS ஆனது வணிகங்களுக்கு நிறைய நன்மைகளைத் தருகிறது. அவற்றில் பின்வருவன அடங்கும்:

அளவீடல்

WaaS நெட்வொர்க்குகள் அதிக அளவில் வளர்ச்சியடையக் கூடியதாகும். இதனால், வன்பொருள், மென்பொருள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட வைஃபை நெட்வொர்க் சம்மந்தமான தேவைகளை வணிகங்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்திக் கொள்ளலாம் அல்லது தரமிறக்கலாம்.

உரிமைக்கான செலவு மிகக் குறைவு

WaaS-ல் உரிமைக்கான செலவு மிகவும் குறைவு. ஏனென்றால், இதில் வன்பொருள் வாங்கவோ அல்லது வைஃபை மேலாண்மை சேவைகளை அவுட்சோர்ஸ் செய்யவோ எந்த அவசியமும் இல்லை.

கணிக்கக்கூடிய கட்டண அட்டவணையை உருவாக்குகிறது

WaaS வழங்குநர்கள் பொதுவாக வைஃபை நெட்வொர்க்குகளின் பயன்பாட்டைப் பொறுத்தே வணிகங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கின்றனர். இது பட்ஜெட்டை எளிதாக்கி வணிகங்களுக்கான கணிக்கக்கூடிய கட்டண அட்டவணையை உருவாக்குகிறது. 

முழு கட்டுப்பாடு 

இது வணிகங்களை அதன் நெட்வொர்க் மீது முழு கட்டுப்பாடு செலுத்தவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது. அதாவது வணிகங்கள் தங்கள் வயர்லெஸ் அணுகல் புள்ளிகளை உள்ளமைக்கலாம், வயர்லெஸ் நெட்வொர்க்குகளை நிர்வகிக்கலாம் மற்றும் சொந்தமாக வைஃபை பகுப்பாய்வு செய்யலாம்.

WaaS-ன் குறைபாடுகள்

இதிலும் ஒரு சில குறைபாடுகள் உள்ளன. அவை பின்வருமாறு:

வலுவான தகவல் தொழில்நுட்ப குழுவிற்கான தேவை

இதில் வணிகங்கள் வைஃபை நெட்வொர்க் தொழில்நுட்பங்கள் மற்றும் வணிக மேலாண்மை மென்பொருளில் கைத்தேர்ந்த வலுவான தொழில்நுட்பக் குழுவைக் கொண்டிருக்க வேண்டும். இது வரையறுக்கப்பட்டத் தகவல் தொழில்நுட்ப வளங்களைக் கொண்ட வணிகங்களுக்கு சவாலாக அமையலாம்.

சிறந்த வைஃபை நெட்வொர்க் மேலாண்மை சேவைகள் இல்லாமல் இருத்தல் 

பெரும்பாலான WaaS விற்பனையாளர்கள் ஆப்டிமைசேஷன், செக்யூரிட்டி ஆடிட், டிரபுள்ஷூட்டிங் மற்றும் வைஃபை மார்க்கெட்டிங் போன்ற வைஃபை நெட்வொர்க் மேலாண்மை சேவைகளை வழங்குவதில்லை. அதாவது வணிகங்கள் தங்கள் வயர்லெஸ் நெட்வொர்க்குகளுக்கான இத்தகைய தேவைகளைத் தாங்களாகவே நிர்வகிக்க வேண்டிய அவசியம் எழுந்தது.

 

சர்வீஸ் வைஃபை Vs. மேனேஜ்ட் வைஃபை: உங்கள் வணிகத்திற்கு எது சிறந்தது?

மேனேஜ்ட் வைஃபை மற்றும் சர்வீஸ் வைஃபை என இவ்விரண்டுமே அவற்றின் சொந்த நன்மைகள் மற்றும் குறைபாடுகளைக் கொண்டுள்ளன. இவை வெவ்வேறு வைஃபை நெட்வொர்க் தேவைகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. அளவு, வைஃபை நெட்வொர்க் தேவைகள், பட்ஜெட் மற்றும் தொழிநுட்ப குழுவின் வைஃபை நிபுணத்துவம் ஆகியவற்றைப் பொறுத்து ஒரு வணிகத்திற்குப் பொருத்தமான வைஃபையைத் தேர்வு செய்ய வேண்டும்.

  • குறைவான வைஃபை சம்மந்தமான அறிவு மற்றும் வளங்களைக் கொண்ட வணிகங்களுக்கு, மேனேஜ்ட் வைஃபை ஒரு சிறந்தத் தேர்வாக அமையும். ஏனெனில், இது வன்பொருள் அமைப்பு மற்றும் மேலாண்மை சேவைக்கான தேவையை அகற்றுகிறது. மறுபுறம், வைஃபை தொடர்பான நிபுணத்துவம் மற்றும் வளங்களைக் கொண்ட வணிகங்களுக்கு சர்வீஸ் வைஃபை மிகவும் பொருத்தமானதாக அமையும். இது வயர்லெஸ் நெட்வொர்க்கின் முழு கட்டுப்பாட்டை வழங்குவதோடு வயர்லெஸ் நெட்வொர்க்குகளை நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது.

  • பல பயனர்களைக் கொண்ட பெரிய தளங்களில் பணிபுரியும் வகையில் நம்பகமான மற்றும் பாதுகாப்பான வைஃபை இணைப்பு தேவைப்படும் எந்தவொரு நிறுவனத்திற்கும், மேனேஜ்ட் வைஃபை ஒரு சிறந்த தீர்வாக அமையும். லாபத்தை அதிகரிக்க இது நேரம் வீணாகுவதைத் தவிர்க்கவும், மோசமான செயல்திறன் மற்றும் செயல்படாத பகுதிகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைத் தணிக்கவும் உதவுகிறது. மறுபுறம், வைஃபை நெட்வொர்க் செலவுகளைக் குறைக்கவும், வைஃபை செயல்திறனை திறம்பட பராமரிக்கவும் விரும்பும் வணிகங்களுக்கு WaaS ஒரு நல்ல வழியாக அமையும். 

  • மருத்துவமனைகள், பள்ளிகள், மால்கள் மற்றும் பிற வணிக வைஃபை நெட்வொர்க்குகளுக்கு WaaS பொருத்தமானதாகும். அதே சமயம், பெரிய நிறுவனங்கள், வைஃபை ஹாட்ஸ்பாட்கள், வைஃபை கஃபேக்கள் மற்றும் அதிக அளவிலான பயனர்கள் கொண்ட வைஃபை நெட்வொர்க்குகளுக்கு மேனேஜ்ட் வைஃபை சிறந்ததாகும்.

வைஃபை நெட்வொர்க் தேவைகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பொறுத்தே ஒரு வணிகத்திற்கு மிகவும் பொருத்தமான வைஃபை தீர்வு அமையும். நிறுவனங்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான பிசினஸ் வைஃபைத் தீர்வைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், தங்களின் வைஃபை தேவைகள் பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும். இது தகவலறிந்த முடிவை எடுக்கவும், தங்களின் பிசினஸ் வைஃபை இலக்குகளுடன் ஒத்துப்போக வல்ல வயர்லெஸ் தீர்வைத் தேர்ந்தெடுக்க உதவும்.

வணிகங்கள் தங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட்டைப் பொறுத்து, வைஃபை நெட்வொர்க் உள்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்து வெற்றி அடைய உதவும் வகையில், WaaS அல்லது மேனேஜ்ட் வைஃபை தீர்வுகளைத் தேர்வு செய்யலாம். சரியான தீர்வைத் தேர்ந்தெடுப்பது மூலம், வணிக வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு வைஃபை நெட்வொர்க் தொழில்நுட்பத்தை வணிகங்கள் அதிகம் பயன்படுத்த முடியும்.

முடிவுரை

தற்போது வைஃபை ஆனது வணிகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதால், வயர்லெஸ் நெட்வொர்க் உள்கட்டமைப்பு என்பது இனி ஒரு விருப்பமாக அல்லாமல் அவசியமானதாக மாறிவிட்டது. சர்வீஸ் வைஃபை மற்றும் மேனேஜ்ட் வைஃபை என்பது வணிகங்கள் தங்கள் வைஃபை தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தக்கூடிய இரண்டு வகையான வைஃபை தீர்வுகள் ஆகும்.

இந்தப் பதிவானது சர்வீஸ் வைஃபை மற்றும் மேனேஜ்ட் வைஃபை மற்றும் அவற்றுக்கிடையேயான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். வணிகங்கள் தங்கள் நெட்வொர்க் தேவைகளைப் பூர்த்தி செய்ய வல்ல வைஃபை தீர்வுகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், தங்கள் வைஃபைத் தேவைகள் குறித்து நன்கு ஆராய்ந்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். வைஃபை தீர்வுகளைப் பற்றி உங்களுக்கு வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் நிபுணர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப சரியான ஒரு வயர்லெஸ் தீர்வுகளைப் பெற இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

அல்லது, மேனேஜ்ட் வைஃபையைத் தேர்வு செய்ய நீங்கள் முடிவு செய்திருந்தால், உங்கள் வணிகத்திற்கு உகந்த வயர்லெஸ் நெட்வொர்க் உள்கட்டமைப்பை உருவாக்க உதவும் ACT-ன் மேனேஜ்ட் வைஃபை சேவைகளைப் பார்க்கவும். ACT ஒவ்வொரு பயனருக்கும் இன்டோர் அவுட்டோர் என சிறந்த வைஃபை அணுகல் புள்ளிகள், பிரத்யேக வேகம், சிங்கிள் பாயிண்ட் நெட்வொர்க் மேலாண்மை மற்றும் முழுமையாக நிர்வகிக்கப்படும் சேவைகளை வழங்குகிறது.

 

இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்? இன்றே எங்களைத் தொடர்பு கொண்டு, உங்கள் வைஃபை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வைஃபை நெட்வொர்க் உள்கட்டமைப்பைப் பெற்றிடுங்கள். நீங்கள் வெற்றி அடைய உங்களுக்கு உதவ நாங்கள் எப்பொழுதும் காத்திருக்கிறோம்!

 

  • Share

Be Part Of Our Network

Related Articles

Most Read Articles

PAY BILL

4 easy ways to pay ACT Fibernet bill online

Monday, Dec 04, 2017 · 2 Mins
1465819

WI-FI

Simple Ways to Secure Your Wi-Fi

Wednesday, May 16, 2018 · 10 mins
542136
Read something you liked?

Find the perfect internet plan for you!

Chat How may i help you?