BROADBAND

ACT ஃபைபர் ஆப்டிக் பிராட்பேண்ட் இணைய இணைப்பு

Wednesday, Apr 26, 2023 · 40 mins

701

ACT ஃபைபர்நெட் பிராட்பேண்ட் இணைய இணைப்பு

ஃபைபர் ஆப்டிக் பிராட்பேண்ட் இணையம் என்றால் என்ன?

ஃபைபர் ஆப்டிக் பிராட்பேண்ட் என்பது இணைய இணைப்பின் ஒரு வடிவமாகும், இது தரவு பரிமாற்றத்திற்கு ஆப்டிகல் ஃபைபர்களைப் பயன்படுத்துகிறது. பாரம்பரிய கேபிள்களுடன் ஒப்பிடும்போது, ஃபைபர் ஆப்டிக்கில் பயன்படுத்தப்படும் கம்பிகள் மெல்லியதாகவும் குறுக்கீடுகளுக்கு குறைவாக பாதிக்கப்படக்கூடியதாகவும் இருக்கும். இதன் அர்த்தம், பயனர்கள் ஃபைபர் ஆப்டிக்ஸ் மூலம் வேகமான, நம்பகமான இணைய இணைப்பை அனுபவிக்க முடியும்.

கோட்பாட்டளவில், ஃபைபர் இணைப்புகள் 1Gbps வரை வேகத்தை வழங்குகின்றன. கேமிங், HD வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்தல் மற்றும் பெரிய கோப்புகளைப் பதிவிறக்குதல் போன்ற வேகமான இணைப்பு தேவைப்படும் இணைய செயல்பாடுகளுக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது.

இந்தியாவில் ஃபைபர் ஆப்டிக் பிராட்பேண்டின் ஊடுருவல் வேகமாக வளர்ந்து வருகிறது, மேலும் ACT ஃபைபர்நெட் முன்னணி வழங்குநர்களில் ஒன்றாகும். ஆனால், ACT இன் ஃபைபர் நெட் ஆஃபரிங்குகளைப் பார்ப்பதற்கு முன், ஃபைபர் ஆப்டிக் இணைப்புகள் மற்றும் பாரம்பரிய பிராட்பேண்ட் இடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது அவசியம். இது பயனர்கள் தங்கள் வீட்டிற்கு சிறந்த விருப்பத்தைப் பற்றி தகவலறிந்த முடிவை எடுக்க உதவும்.

ஃபைபர் ஆப்டிக் இணைப்பு மற்றும் வழக்கமான பிராட்பேண்ட் இடையே உள்ள வேறுபாடு என்ன?

ஃபைபர் நெட் இணைப்புகளுக்கும் வழக்கமான பிராட்பேண்ட் இணைப்புகளுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன.

  • ஃபைபர் ஆப்டிக் இணைப்பு மற்றும் வழக்கமான பிராட்பேண்ட் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு தரவு பரிமாற்ற தொழில்நுட்பத்தின் வகையாகும். வழக்கமான பிராட்பேண்ட் டேட்டாவை அனுப்ப காப்பர் கேபிள்களைப் பயன்படுத்துகிறது, அதே சமயம் ஃபைபர் மிகவும் மெல்லிய ஆப்டிகல் ஃபைபர்களைப் பயன்படுத்துகிறது.

  • இரண்டாவது மிகத் தெளிவான வேறுபாடு ஸ்பீடு (வேகம்). ஃபைபர்நெட் இணைப்புகள் பாரம்பரிய இணைய இணைப்பு வகைகளை விட மிக வேகமானவை, இதனால் பயனர்கள் குறைந்த நேரத்தில் ஆன்லைனில் தேவையானதை செய்ய அனுமதிக்கிறது. உதாரணமாக, ஃபைபர் நெட் பிராட்பேண்ட் 1Gbps டவுன்லோடு ஸ்பீடை வழங்குகிறது, அதே சமயம் காப்பர் அடிப்படையிலான இணைப்புகள் 300Mbps வரை மட்டுமே வேகத்தை வழங்குகின்றன.

  • ஃபைபர்நெட் இணைப்புகள் வானிலை மற்றும் தூரம் போன்ற வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படாததால் சிறந்த நம்பகத்தன்மையையும் வழங்குகின்றன. மறுபுறம், பாரம்பரிய பிராட்பேண்ட் இணைப்புகள் வெளிப்புற காரணிகளின் குறுக்கீடுகளால் பாதிக்கப்படலாம்.

  • பிராட்பேண்ட் இணைய இணைப்புகளின் விலை தற்போது ஃபைபர் நெட் இணைப்புகளை விட ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. இருப்பினும், ஃபைபர் நெட் இணைப்புகள் செலவு வாரியாக சிறந்த தேர்வாக மாறுவதற்கு கொஞ்ச நாட்கள் தான் உள்ளன.

  • இறுதியாக, ஃபைபர் நெட் இணைப்புகள் வழக்கமான பிராட்பேண்ட் இணைப்புகளை விட மிகவும் பாதுகாப்பானவை, ஏனெனில் அவற்றை எளிதில் டெப் செய்யவோ அல்லது குறுக்கிடவோ முடியாது. ஆனால், பாரம்பரிய பிராட்பேண்ட் இணைப்புகள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படலாம்.

ACT ஃபைபர்நெட் பிராட்பேண்ட் என்றால் என்ன?

ACT (ACT - ஏட்ரியா கன்வர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்) என்பது இந்தியாவின் முன்னணி இணைய சேவை வழங்குனர்களில் ஒன்றாகும், இது நாடு முழுவதும் பரவியிருக்கும் பயனர் தளமாகும். இந்நிறுவனம் பல பிரிவுகளில் பல விருதுகளை வென்றுள்ளது, இதில் ETயிலிருந்து பெற்ற 'தி பெஸ்ட் பிராண்ட் அண்ட் மோஸ்ட் ஐக்கானிக்' மிகவும் முக்கியமானது.

ACT ஃபைபர்நெட் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புத் பிளான்களை வழங்குகிறது, வேகம் 1Gbps வரை இருக்கும். HD வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்தல், பெரிய ஃபைல்களைப் டவுன்லோடு செய்தல் மற்றும் கேமிங் போன்ற அதிவேக ஆன்லைன் செயல்பாடுகளுக்கு இந்த இணைப்புகள் சிறந்தவை. ACT ஃபைபர்நெட் (ACT Fibernet) தொழில்துறையில் சில சிறந்த வாடிக்கையாளர் சேவைகளையும் வழங்குகிறது, எனவே, பயனர்களின் தேவைகள் கவனிக்கப்படும் என்று உறுதியளிக்க முடியும்.

ACT ஃபைபர்நெட் என்பது இன்று கிடைக்கும் நம்பகமான ஃபைபர் இணைய இணைப்பு விருப்பங்களில் ஒன்றாகும். பல்வேறு ACT இன்டர்நெட் ஃபைபர் பிராட்பேண்ட் பிளான்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வீட்டு உபயோக வாடிக்கையாளர்களுக்கு:

  • ACT வெல்கம் - 50 Mbps வரை வேகம், அன்லிமிடேட் டேட்டா, மாதத்திற்கு வெறும் ரூ. 549.

  • ACT சில்வர் ப்ரோமோ - 150 Mbps வரை வேகம், அன்லிமிடேட் டேட்டா, மாதத்திற்கு வெறும் ரூ. 799.

  • ACT பிளாட்டினம் ப்ரோமோ - 250 Mbps வரை வேகம், அன்லிமிடேட் டேட்டா, மாதத்திற்கு வெறும் ரூ. 1049.

  • ACT டயமண்ட் - 300 Mbps வரை வேகம், அன்லிமிடேட் டேட்டா, மாதத்திற்கு வெறும் ரூ. 1349.

  • ACT ஜிகா - 1 Gbps வரை வேகம், அன்லிமிடேட் டேட்டா, மாதத்திற்கு வெறும் ரூ. 1999.

கூடுதல் மாதங்கள், இலவச வைஃபை ரூட்டர்கள் மற்றும் நெட்ஃபிக்ஸ்க்கான காம்ப்ளிமெண்டரி சப்ஸ்கிரிப்ஷன் போன்ற பல சலுகைகளை ACT கொண்டுள்ளது, இவை மேலே உள்ள பிளான்களில் ஒன்றை சப்ஸ்கிரைப் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். இவை பிளான்களின் மதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.

வணிக வாடிக்கையாளர்களுக்கு:

ACT வணிகப் பயனர்களுக்கு 1Gbps வரை வேகத்துடன் பல பிசினஸ் பிளான்களையும் வழங்குகிறது. வணிக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும், நிர்வகிக்கப்பட்ட வைஃபை மற்றும் SD-WAN போன்ற பிற சேவைகளும் உள்ளன, இது வணிகங்கள் தங்கள் இணைய இணைப்புகளை மிகவும் திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.

இப்போது, ACT ஃபைபர்நெட் பிராட்பேண்டைப் பயன்படுத்துவதன் நன்மைகள் மற்றும் பலன்களைப் பார்ப்போம்.

ACT இணைய இணைப்புகளின் நன்மைகள் என்ன?

இந்தியாவில் ஏராளமான ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பு வழங்குநர்கள் உள்ளனர், எனவே, மக்கள் ஏன் ACT ஃபைபர்நெட்டைத் தேர்வு செய்ய வேண்டும்? ACT இணைப்பு மூலம் பயனர்கள் அனுபவிக்கக்கூடிய சில நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

மலிவு பிளான்கள்

வெவ்வேறு ISPகள் வழங்கும் பெரும்பாலான ஃபைபர் இணைப்புகள் மிகவும் விலை உயர்ந்தவை. எவ்வாறாயினும், ACT மிகவும் மலிவு விலையில் சில பிளான்களைக் கொண்டுள்ளது, அதாவது பயனர்கள் தங்கள் பாக்கெட்டை காலி செய்யாமல் மின்னல் வேக இணைய இணைப்பை அனுபவிக்க முடியும். மிகவும் மலிவு விலை பிளான் மாதத்திற்கு வெறும் ரூ. 549 இல் தொடங்குகிறது, இது ஒரு நல்ல உணவகத்தில் உணவின் விலையை விட குறைவாகும்.

அதிவேக இணைப்புகள்

ACT ஃபைபர்நெட் இந்தியாவில் 1 Gbps வேகத்துடன் கூடிய வேகமான இணைய இணைப்பை வழங்குகிறது. இதன் பொருள் பயனர்கள் சமீபத்திய உள்ளடக்கத்தை 1080p மற்றும் 4k இல் எந்த பின்னடைவும் அல்லது இடையகமும் இல்லாமல் அணுகலாம். பெரிய ஃபைல்களை நிமிடங்களில் டவுன்லோடு செய்ய இது அவர்களுக்கு உதவுகிறது, இது வணிக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் முக்கியமானது.

அன்லிமிட்டேட் டேட்டா 

ACT ஃபைபர்நெட் இன் மற்றொரு சிறந்த விஷயம் என்னவென்றால், அனைத்து பிளான்களும் நியாயமான பயன்பாட்டுக் கொள்கைக்கு உட்பட்டு அன்லிமிட்டேட் டேட்டாக்களுடன் வருகின்றன. எனவே, பயனர்கள் தாங்கள் விரும்பும் அளவுக்குத் டேட்டாவை அணுகலாம். கேமர்கள் மற்றும் ஸ்ட்ரீமர்கள் போன்ற அதிக டேட்டாவைப் பயன்படுத்துபவர்களுக்கு இது எளிது.

தடையற்ற வேகம்

ACT ஃபைபர்நெட் அதிநவீன நெட்வொர்க் உள்கட்டமைப்பை வழங்குகிறது, இது பகல் அல்லது இரவின் எந்த நேரமாக இருந்தாலும் பயனர்கள் தடையில்லா வேகத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது. சிறந்த கேமிங் அனுபவத்தைப் பெற தடையில்லா இணைப்பு தேவைப்படும் கேமர்களுக்கு இது மிகவும் முக்கியமானது.

நம்பகத்தன்மை

ACT ஃபைபர்நெட்டைப் பயன்படுத்துவதன் முதன்மையான நன்மைகளில் ஒன்று நம்பகத்தன்மை. இந்த இணைப்பு நம்பகமானது மற்றும் நிலையானது, மற்ற ISPகள் வேகத்தை வழங்குவதில் சிரமப்படும் பகுதிகளிலும் கூட இது சிறந்த அனுபவத்தை அளிக்கும். இந்த இணைப்பு முழுநேர வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றால் ஆதரவு அளிக்கப்படுகிறது, எனவே, பயனர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவர்களின் தேவைகள் கவனிக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்க முடியும்.

கவர்ச்சிகரமான சலுகைகள்

பன்னிரெண்டு மாத ஃபைபர் பிராட்பேண்ட் பிளானில் இரண்டு மாதங்கள் இலவசம், நிலையான வைஃபை வேகத்திற்கான இலவச வைஃபை ரூட்டர் மற்றும் கூடுதல் கட்டணமின்றி காம்ப்ளிமெண்டரி நெட்ஃபிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் போன்ற கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை ACT அடிக்கடி வழங்குகிறது. இவை, ஒரு கல்லில் பல மாங்காய் என்பது போல், ACT ஃபைபர்நெட்டை இன்னும் கவர்ச்சிகரமான விருப்பமாக மாற்றுகின்றன.

ACT ஃபைபர்நெட் இணைப்புகளின் நன்மைகள்

ACT ஃபைபர்நெட்டைத் தேர்ந்தெடுப்பது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்:

நம்பமுடியாத வேகம்

ACT ஃபைபர்நெட் இந்தியாவில் 1 Gbps வரையிலான பிளான்களுடன் மிக உயர்ந்த இணைய வேகத்தை வழங்குகிறது. இது தடையற்ற வேகத்தால் கூடுதலாக வழங்கப்படுகிறது, எனவே பயனர்கள் தடையற்ற ஸ்ட்ரீமிங் மற்றும் பதிவிறக்க அனுபவத்தை அனுபவிக்க முடியும்.

நவீன ஃபைபர் தொழில்நுட்பம்

ACT ஃபைபர்நெட் அதிநவீன ஃபைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இது பயனர்கள் சிறந்த வேகத்தையும் நம்பகமான இணைப்பையும் பெறுவதை உறுதி செய்கிறது. எந்த நேரத்திலும் இணைப்பில் எந்த தோய்வும் அல்லது குறையும் இல்லாமல், வழங்குநரால் வாக்குறுதியளிக்கப்பட்ட வேகத்தைப் பெறுவதற்கு அவர்கள் உத்தரவாதம் அளிக்கின்றனர்.

சமமான டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகம்

கணிசமான எண்ணிக்கையிலான ISP வழங்குநர்கள் சமச்சீரற்ற வேகத்தை வழங்குகிறார்கள் (அப்லோடு வேகத்தை விட அதிக டவுன்லோடு வேகத்துடன்). நிறைய டேட்டாவைப் அப்லோடு செய்ய வேண்டிய பயனர்களுக்கு இது மிகவும் சிரமமாக இருக்கும். இருப்பினும், ACT ஃபைபர்நெட் உடன், டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகம் சமமாக இருக்கும். அத்துடன் பயனரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்பீடு பிளானை சார்ந்துள்ளது. எனவே, ஒவ்வொரு பயனர் வகையும் ACT இணைப்புடன் சிறந்த அனுபவத்தைப் பெற முடியும்.

தொடுதல் இல்லாத (ஜீரோ-டச்) இன்ஸ்டாலேஷன்

தற்போதைய சூழ்நிலையில் (கோவிட் கடந்த காலத்தின் ஒரு விஷயமாகத் தோன்றினாலும்) சோஷியல் டிஸ்டன்ஸிங்கிற்கு மிகவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஜீரோ-டச் இன்ஸ்டாலேஷன் செயல்முறையை வழங்குவதன் மூலம் ACT இதை கவனத்தில் கொள்கிறது. இதன் பொருள், இன்ஸ்டாலேஷனுக்கு வருகைதரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பயனரையோ பயனரின் வீட்டு மேற்பரப்புகளையோ தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

24*7 மணி நேர வாடிக்கையாளர் ஆதரவு

ACT ஃபைபர்நெட் ஆனது 24 மணி நேரமும் வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குகிறது. இதன் பொருள் பயனர்கள் தங்கள் இணைப்பில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் (அரிதாக நடக்கும்) பகல் அல்லது இரவின் எந்த நேரத்திலும் உதவியைப் பெறலாம். ACT இன் வாடிக்கையாளர் ஆதரவு பற்றி மேலும் அறிய, இங்கே கிளிக் செய்யவும்.

அங்கீகரிக்கப்பட்ட விருதுகள்

ACT ஃபைபர்நெட் இந்தியாவில் உள்ள பிராட்பேண்ட் வழங்குநர்களில் பல விருதுகள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட ஒரே பிராட்பேண்ட் வழங்குநர் ஆகும், இது ET வழங்கும் சிறந்த பிராண்ட் அத்துடன் மிகவும் பிரபலமானது, ஊக்லாவின் டெல்லியின் வேகமான வயர்டு பிராட்பேண்ட் மற்றும் பெங்களூரில் ஸ்ட்ரீமிங்கிற்கான சிறந்த பிராட்பேண்ட் போன்ற பல விருதுகளை வென்றுள்ளது. மேலும், தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற இந்தியாவின் பல முன்னணி செய்தித்தாள்களில் இது இடம்பெற்றுள்ளது.

ACT ஃபைபர் ஆப்டிக் பிராட்பேண்ட் இணைய இணைப்பை எவ்வாறு பெறுவது?

ஒரு புதிய ACT இணைப்பை பெறுவதற்கான செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் நேரடியானது. கீழே உள்ள ஸ்டெப்-பை-ஸ்டெப் புராசஸை பாருங்கள்:

ஸ்டெப் 1: ACT இணையதளத்தைப் பார்வையிடவும்.

ஸ்டெப் 2: பயனர்கள் தங்களுக்கான பிளான்களைக் கண்டறிய கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து தங்கள் இருப்பிடத்தைத் தேர்வு செய்யவேண்டும். அவர்களின் இருப்பிடம் பட்டியலிடப்படவில்லை என்றால், அந்த பகுதியில் ACT உள்ளதா என்பதைக் கண்டறிய அவர்கள் தங்கள் இருப்பிடத்தை உள்ளிடலாம்.

ஸ்டெப் 3: அவர்களுக்கு மிகவும் பொருத்தமான பிளானை தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டு உபயோக வாடிக்கையாளர்கள் பிராட்பேண்ட் பிளான்களை இங்கே பார்க்கலாம். வர்த்தக வாடிக்கையாளர்கள் பிசினஸ் பிராட்பேண்ட் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஸ்டெப் 4: அவர்கள் பிளானை தேர்ந்தெடுத்ததும், அவர்கள் தங்கள் விவரங்களை உள்ளிட்டு செயல்முறையைத் தொடரலாம்.

ஸ்டெப் 5: அடுத்து, பட்ஜெட்டுக்கு ஏற்ற பிளானை தேர்ந்தெடுத்து, சலுகையைத் தேர்வுசெய்து, ஆர்டரை உறுதிசெய்து, பணம் செலுத்தத் தொடரவும்.

ஸ்டெப் 6: இறுதியாக, இன்ஸ்டாலேஷன் பற்றிய விவரங்களை அறிய ACT டீம் அணுகும் வரை காத்திருக்கவும்.

மாற்றாக, பயனர்கள் முகப்புப் பக்கத்தில் உள்ள புதிய இணைப்பு தாவலை நேரடியாகக் கிளிக் செய்து, தங்கள் விவரங்களை இங்கே உள்ளிடலாம்.

ACT மூலம் உங்களுக்கு கிடைக்கும் பிற சலுகைகள்

பிராட்பேண்ட் சேவைகளுக்கு கூடுதலாக, ACT ஆனது பயனர்கள் தங்கள் ஃபைபர் பிராட்பேண்ட் இணைய இணைப்புகளை அதிகம் பயன்படுத்த உதவும் பல சலுகைகளையும் வழங்குகிறது. இதில் பின்வருபவைகள் அடங்கும்:

ACT ஹோம் கேமரா

இது வை-ஃபை-இயக்கப்பட்ட பாதுகாப்பு கேமரா ஆகும், இது கூடுதல் பாதுகாப்பிற்காக பயனர்கள் தங்கள் வீடுகளில் இன்ஸ்டால் செய்யமுடியும். எந்தவொரு ACT இணைப்பிலும் கேமரா சீராக இயங்க முடியும் மற்றும் செயலி மூலம் தொலைவிலிருந்து அணுகலாம்.

ACT டிஜிட்டல் டிவி

இணையத்துடன் கூடுதலாக, பயனர்கள் ACT டிஜிட்டல் டிவி மூலம் 200 க்கும் மேற்பட்ட சேனல்களுக்கான அணுகலைப் பெறலாம். இதில் செய்தி, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் பலவும் அடங்கும்.

இறுதியாக 

ACT ஃபைபர் ஆப்டிக் பிராட்பேண்ட் இணைய இணைப்பு, தங்கள் பகுதியில் நம்பகமான மற்றும் பாதுகாப்பான இணைப்பை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு பல நன்மைகள் மற்றும் பலன்களை வழங்குகிறது. சமமான டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகம், ஜீரோ-டச் இன்ஸ்டாலேஷன் செயல்முறை, முழுநேர கஸ்டமர் சர்வீஸ், ACT ஹோம் கேமரா மற்றும் டிஜிட்டல் டிவி போன்ற பிற சலுகைகள் போன்ற பல அம்சங்களுக்கு, பயனர்கள் தங்கள் இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பயனரின் பகுதிக்கான பிளான்கள் மற்றும் சேவைகளைப் பார்க்க, பயனர்கள் ACT இணையதளத்திற்குச் சென்று மேலே குறிப்பிட்டுள்ள ஸ்டெப்களைப் பின்பற்ற வேண்டும்.

ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகளை தெளிவுபடுத்த தயங்காமல் எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளவும்

 

  • Share

Be Part Of Our Network

Related Articles

Most Read Articles

PAY BILL

4 easy ways to pay ACT Fibernet bill online

Monday, Dec 04, 2017 · 2 Mins
1443936

WI-FI

Simple Ways to Secure Your Wi-Fi

Wednesday, May 16, 2018 · 10 mins
540239
Read something you liked?

Find the perfect internet plan for you!

Chat How may i help you?